செய்திகள் :

"முத்துவேலர் பணத்தில் திட்டம் கொண்டுவந்தால் இன்பநிதி பெயரைக் கூட வையுங்கள்" - ஜெயக்குமார் காட்டம்!

post image

தமிழக அரசின் திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பெயரை வைப்பதற்கு எதிராக முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கு தொடுத்துள்ளார்.

திமுக தரப்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கிய திட்டத்துக்கெல்லாம் 'அம்மா' எனப் பெயர் வைத்ததைச் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்துப் பேசியுள்ளார்.

அம்மா உணவகம்

"அம்மா என்பது ஒரு யூனிவர்சல் சொல். அது என்ன தனிப்பட்ட நபரின் பெயரா? AMMA என்பதற்கான விளக்கத்தை ஏற்கெனவே கொடுத்திருக்கிறோம். எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் எனப் பொருள்தரும் abbreviation (ஒரு சொற்றொடரின் சுருக்க வடிவம்) அம்மா.

ஸ்டாலின் நலம் காக்கும் திட்டம், உங்களுடன் ஸ்டாலின் எனப் பெயர்வைக்க அது என்ன உங்கள் அப்பன் வீட்டு பணமா? கருணாநிதி சம்பாதித்த பணத்தை எடுத்துக்கொடுங்கள் எங்களுக்கு மாறுபட்டக் கருத்து இல்லை, அவருடைய அப்பா முத்து வேலர் பெரிய டாடா பிர்லா குடும்பத்துக்கு சொந்தக்காரர் அவர் பணத்திலிருந்து எடுத்துக்கொடுங்கள்.

'நலம் காக்கும் ஸ்டாலின்'

அப்பன் பாட்டன் பணத்தைக் கொடுத்தால் ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், மக்கள் வரி பணத்தில் தொடங்கும் திட்டங்களுக்கு உங்கள் பெயர் வைக்க என்ன தார்மீக உரிமை இருக்கிறது. அதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்." எனக் கடுகடுத்தார் ஜெயக்குமார்.

மேலும், "நலம் காக்கும் ஸ்டாலின் எனப் பேசுகிறீர்களே, வட சென்னையில் பாருங்கள் எல்லா இடமும் குப்பையும் கூளமுமாக இருக்கிறது. சுத்தம் செய்யாமல் குப்பை மேடுகளாக இருக்கிறது.... இந்த நான்கரை வருடமாக மருந்து, மாத்திரை, டாக்டர் இல்லாமலா இருந்தது, தேர்தல் வருவதனால் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் வருகிறது.

ஸ்டாலினுக்கு யோசனை சொல்வதற்கு சிலர் இருக்கிறார்கள். அவர்கள் இப்படி ஏதாவது சொல்வார்கள். ஆனால் மக்கள் அதையெல்லாம் நம்புகிறவர்கள் இல்லை. தேர்தலுக்கு இன்னும் மாதங்கள் இருக்கிறது, மக்கள் ரிவீட் அடிக்கக் காத்திருக்கிறார்கள்." எனப் பேசினார்.

'கொரோனா நேரத்துலகூட கக்கூஸை கழுவினோமே' - போராடும் துப்புரவு தொழிலாளர்களின் கண்ணீர் - Spot Visit

துப்புரவு பணியாளர்கள் போராட்டம்சென்னை ரிப்பன் மாளிகை பகுதி எப்போதுமே பரபரப்பாக போக்குவரத்து நெரிசல்மிக்க பகுதியாகத்தான் இருக்கும். அந்தப் பகுதி இப்போது இன்னும் பரபரப்பாக நெரிசலாக மாறியிருக்கிறது. காரண... மேலும் பார்க்க

புல்வாமா தாக்குதலில் மோடி அரசைக் குற்றம்சாட்டிய J&K Ex ஆளுநர் மறைவு; யார் இந்த சத்யபால் மாலிக்?

ஜம்மு காஷ்மீரில் புல்வாமா தாக்குதலின்போதும், மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை பாஜக அரசு நீக்கியபோதும் அங்கு ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் (79) இன்று காலமானார்.கிட்னி தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு டெல... மேலும் பார்க்க

புதுச்சேரி: `செவிலியர் பணிகளை கொல்லைப்புறமாக நியமிக்க ஜிப்மர் திட்டமிடுகிறது’ - எச்சரிக்கும் திமுக

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித் தலைவரும், தி.மு.க அமைப்பாளருமான சிவா, ``ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்களுடன் கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டு வந்த ஜிப்மர் நிர்வாகம், தற்போதைய... மேலும் பார்க்க

வேலூர்: குண்டும், குழியுமான சாலையில் உருண்டு போராட்டம் நடத்திய கவுன்சிலர் - மேயருடன் வாக்குவாதம்

வேலூர் மாநகராட்சி 49-வது வார்டு கவுன்சிலர் லோகநாதன். சுயேட்சையாக வெற்றிப்பெற்ற இவர், தற்போது அ.தி.மு.க ஆதரவுடன் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், தன் வார்டுக்குட்பட்ட தொரப்பாடி பகுதிகளில் சாலை, கால... மேலும் பார்க்க

'திரைப்புகழ் இருப்பதால் அவருக்கான வெளிச்சம் அதிகமாக இருக்கிறது, ஆனா.!'- விஜய்யை சாடிய சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று( ஆகஸ்ட் 5) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அதில் தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக சாடிப் பேசியிருக்கிறார். "திரைப்புகழ் இருப்பதால் அவருக்கான வ... மேலும் பார்க்க

J&K : 370 ரத்து செய்யப்பட்டு 6 ஆண்டுகள் - நடந்த மாற்றங்கள் என்ன? எப்படி இருக்கிறது ஜம்மு காஷ்மீர்?

அரசியலமைப்பின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக (UT) மறுசீரமைக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் முடிவடைகிறது.மற்ற மாநிலங்களுடன் ஜம்மு & காஷ்மீர் நெருக்காம... மேலும் பார்க்க