அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!
'திரைப்புகழ் இருப்பதால் அவருக்கான வெளிச்சம் அதிகமாக இருக்கிறது, ஆனா.!'- விஜய்யை சாடிய சீமான்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று( ஆகஸ்ட் 5) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அதில் தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக சாடிப் பேசியிருக்கிறார். "திரைப்புகழ் இருப்பதால் அவருக்கான வெளிச்சம் அதிகமாக இருக்கிறது.

தொலைக்காட்சியில் எங்களைக் காட்டுவதைவிட அவர்களைக் காட்டுவது அதிகமாக இருக்கிறது. அது தவறில்லை ஆனால் அவர் எந்தத் தத்துவத்தை வைத்து, எந்தப் பிரச்னைகளுக்காக மக்களுக்காக நின்று போராடியிருக்கிறார் என்பதை வைத்துதான் அரசியல் எதிர்காலம் இருக்கிறது.
விஜயகாந்த் அரசியலுக்கு வரும்போது இல்லாத எழுச்சியா? அவர் நடத்திய முதல் மாநாட்டில் 25 லட்சம் பங்ககேற்றார்கள். அவர் எப்போது கூட்டணிக்குள் சென்றாரோ அப்போது அவர் வைத்திருந்த வாக்கு விழுக்காடு எல்லாம் சரிந்துவிட்டது. அதே பெரியார், அதே அண்ணா என்றால் அர்த்தமில்லை.

ஏற்கெனவே அண்ணா வழியில்தான் சென்றுகொண்டிருக்கிறார்களே மீண்டும் அதே வழியில் பின் சென்றால் அதில் எந்தப் பயனும் இல்லை. முதலில் கொள்கைகளை மாற்ற வேண்டும். அவர்கள் எல்லோரும் அண்ணா வழியில் போகிறார்கள். நான் என் அண்ணன் பிரபாகரன் வழியில் செல்கிறேன்" என்று விஜய்யை மறைமுகமாக சாடி இருக்கிறார்.