அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!
கூலி படத்தில் சாட்ஜிபிடி உதவியால் பாடலை முடித்த அனிருத்!
கூலி படத்தில் சாட்ஜிபிடி உதவியின் மூலமாக பாடலை நிறைவு செய்ததாக இசையமைப்பாளர் அனிருத் கூறியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கூலி திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் கூலி டிஸ்கோ, சிகிடு, உயிர்நாடி நண்பனே, ஐ எம் த டேன்ஜர், மோனிகா, கொக்கி, பவர்ஹவுஸ், மற்றும் மாப்ஸ்டா என்ற பாடல்கள் உள்ளன.
செய்யறிவுகள் இந்தக் காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கிவரும் நிலையில் சாட்ஜிபிடி குறித்து அனிருத் பகிர்ந்த பதிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நேர்காணல் ஒன்றில் அனிருத் பேசியதாவது:
இரண்டு நாள்களுக்கு முன்பாக எனக்கு கிரியேட்டிவ் பிளாக் (படைப்பூக்கம் பாதிப்பு) ஏற்பட்டது. சாட்ஜிபிடியை திறந்து அதில் எனது பாடலின் வரிகளைக் கொடுத்தேன். அதில் ’இதுதான் என்னுடைய பாடல். இதில் கடைசி இரண்டு வரிகளை முடிக்க முடியவில்லை. நான் என்ன செய்வது?’ எனக் கேட்டிருந்தேன்.
நான் உண்மையைத்தான் சொல்கிறேன். (சிரிக்கிறார்). பாதியில் எதுவும் நிறக்கக் கூடாதென நான் பிரீமியம் வெர்சனை சப்ஸ்கிரைப் செய்துள்ளேன்.
ஏஐ என்னுடைய கேள்விக்கு பத்து வரிகளை அனுப்பியது. அதில் ஒரு வரியைப் பார்த்ததும் புதிய யுக்தி தோன்றியதும் மீதியை நான் உருவாக்கிக்கொண்டேன்.
அனைத்து கலைஞர்களுக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படும். அதிகமாக சிந்திப்பதை விட இது சிறந்த வழி என நினைக்கிறேன் என்றார்.
கூலி திரைப்படம் உலகம் முழுவதும் ஆக.14ஆம் தேதி வெளியாகிறது.