ஆயிரம் ஃபாலோயர்ஸ் இல்லாதவர்களுக்கு நேரலை கிடையாது: இன்ஸ்டாகிராம் புதிய விதி!
மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!
சின்ன திரை தொடரில் மகனாக நடித்த நடிகரை, தாய் பாத்திரத்தில் நடித்த நடிகை ஒருவர் திருமணம் செய்துள்ளார். பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில், இவர்கள் இருவரும் இணைந்து வெற்றிகரமாக குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.
இந்தி மொழியில் 2010 முதல் 2011 வரை பியார் கி யே ஏக் கஹானி என்ற தொடர், ஸ்டார் ஒன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்தத் தொடரில் அம்மா பாத்திரத்தில் நடிகை கிஷ்வர் மெர்ச்சன்ட் நடித்திருந்தார். அவருக்கு மகனாக நடிகர் சூயாஷ் ராய் நடித்திருந்தார்.
காட்டேரியாக மாறிய தாய், வேறொருவரிடம் வளரும் வளர்ப்பு மகன் என இருவரின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
தொடரில் நடிக்கும்போதே இருவரிடையேயும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் பரஸ்பரமாக காதலை வெளிப்படுத்திய பின்னர், 2016ஆம் ஆண்டு இவர்களின் திருமணம் நடைபெற்றது.

தொடரில் அம்மா - மகனாக நடித்தவர்கள் நிஜ வாழ்க்கையில் காதலித்து திருமணம் செய்துகொண்டதாக பலராலும் பேசப்பட்டது. இதற்கு காரணம், நிஜ வாழ்க்கையில் கிஷ்வரை விட நடிகர் சூயாஷ் 8 வயது இளையவர் என்பதுதான்.
இவர்கள் திருமணத்துக்கு குடும்பம் உள்பட பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் - எதிர்ப்புகள் எழுந்தாலும், காதலுக்கு வயது பொருட்டல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2021-ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.
கிஷ்வர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்; சூயாஷ் இந்து மதத்தைச் சேர்ந்தவர். இருந்தாலும் இருவரும் தங்கள் குடும்பத்திடம் பேசி, அவர்கள் சம்மதத்துடனேயே திருமணம் செய்துள்ளனர்.

தற்போது, நிஜ வாழ்க்கையில் வெற்றிகரமான திருமண வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும் திரைப் பிரபலங்களின் பட்டியலில் இவர்களும் உள்ளனர்.
திருமணம் செய்துகொண்டு பின்னர், விவாகரத்து அறிவிக்கும் பெரும்பாலான திரை பிரபலங்களுக்கு மத்தியில் வயது வித்தியாசம், மத வேறுபாடு ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபித்து வாழ்ந்து வருகின்றனர் கிஷ்வரும் சூயாஷும்.