அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!
மணிரத்னம் படத்தில் நாயகனாகும் துருவ் விக்ரம்!
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தக் லைஃப் திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தெலுங்கு நடிகரான நவீன் பொலிஷெட்டி மற்றும் ருக்மினி வசந்த் இருவரும் இணைந்து காதல் கதையில் நடிக்கவுள்ளதாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வந்தது.
இதுகுறித்து, இயக்குநர் மணிரத்னத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதனை அவர் மறுத்தார்.
இந்த நிலையில், மணிரத்னம் நடிகர் துருவ் விக்ரமை மற்றும் ருக்மணி வசந்தை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கலாம் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: காதி டிரைலர் தேதி!