அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!
தில்லி அரசுக்கு எதிராக அணிதிரண்ட பெற்றோர்கள்: சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்!
தில்லி அரசுக்கு எதிராக சட்டப்பேரவையை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தில்லி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை(ஆக. 4) தாக்கல் செய்யப்பட்டுள்ள பள்ளிக் கட்டணம் ஒழுங்குமுறை மசோதாவை (தில்லி பள்ளி கல்வியில் கட்டணம் ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் நிர்ணயித்தலில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடித்தல் மசோதா, 2025) திரும்பப்பெற வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்த மசோதா ”தற்போதுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை பலவீனப்படுத்துவதாகவும், கட்டணம் செலுத்தும் முறைகளில் வெளிப்படைத்தன்மையை களையும் நடவடிக்கையாக இருப்பதாகவும்” அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல்வேறு குறைகளை உள்ளடக்கிய இந்த மசோதா, நடுத்தர குடும்பங்கள் நலனுக்கெதிராக இருப்பதாகவும் போராடும் பெற்றோர்கள் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

இதனையடுத்து, ’யுனைடெட் வாய்ஸ் ஆஃப் பேரண்ட்ஸ்’ என்ற சங்கத்தின்கீழ் ஓரணியாக திரண்ட பெற்றோர்களால் இந்த போராட்டம் இன்று (ஆக. 5) நடைபெற்றது. தில்லியில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி தலைவர்களும் பங்கேற்றனர்.
மசோதாவை திரும்பப்பெற பெற்றோர்கள் தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டுள்ளதால் தில்லி முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அரசுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.