மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு! நாடாளுமன்ற...
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.87.82 ஆக நிறைவு!
மும்பை: புதுதில்லி தொடர்ந்து ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்வதால் இந்தியப் பொருட்களுக்கான வரிகளை உயர்த்துவதாக தனது அச்சுறுத்தலை மீண்டும் புதுப்பித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 16 காசுகள் குறைந்து ரூ.87.82 ஆக நிறைவடைந்தது.
இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் நிச்சயமற்ற தன்மை உள்நாட்டு சந்தை உணர்வுகளைத் தொடர்ந்து பாதித்து வருவதால் ரூபாய் மதிப்பு மேலும் சரிய வாய்ப்புள்ளது என்று அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்த நிலையில், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட திடீர் சரிவும் ஓரளவுக்கு சரிவை குறைத்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 87.95 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.87.75 ஆகவும், முடிவில் 16 காசுகள் சரிந்து ரூ.87.82-ஆக முடிவடைந்தது.
நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 48 காசுகள் குறைந்து ரூ.87.66 ஆக நிறைவடைந்தது.
இதையும் படிக்க: ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிவிப்புக்கு முன்னதாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!