செய்திகள் :

ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிவிப்புக்கு முன்னதாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

post image

மும்பை: ஆகஸ்ட் 6 அன்று, ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை அறிவிப்புக்கு முன்னதாக எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் வங்கி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்றய பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் முடிவடைந்தன.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 464.32 புள்ளிகள் சரிந்து 80,554.40 என்ற இன்ட்ராடே குறைந்தபட்சத்தை எட்டியது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ குறியீடான சென்செக்ஸ் 308.47 புள்ளிகள் சரிந்து 80,710.25 புள்ளிகளாகவும், நிஃப்டி 73.20 புள்ளிகள் சரிந்து 24,649.55 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, எடர்னல், பிஇஎல், எச்டிஎஃப்சி வங்கி, பவர் கிரிட், ஐடிசி மற்றும் சன் பார்மாசூட்டிகல் ஆகியவை உயர்ந்த நிலையில் டைட்டன், மாருதி, டிரென்ட், பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், டெக் மஹிந்திரா, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, எல் அண்ட் டி, எச்சிஎல் டெக்னாலஜிஸ் மற்றும் என்டிபிசி ஆகியவை சரிந்து முடிந்தன.

நிஃப்டி-யில் இன்ஃபோசிஸ், அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி ஆகியவை சரிந்த நிலையில் டைட்டன் கம்பெனி, மாருதி சுசுகி, எஸ்பிஐ லைஃப், டிரெண்ட், இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவை லாபம் உயர்ந்து முடிவடைந்தன.

பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 0.27 சதவிகிதமும், மிட்கேப் குறியீடு 0.14 சதவிகிதமும் சரிந்தது முடிவடைந்தன.

துறைகளில் ஆட்டோ குறியீடு 0.4 சதவிகிதம் உயர்ந்த நிலையில், வங்கி, ஐடி, எண்ணெய் & எரிவாயு, எஃப்எம்சிஜி, பார்மா ஆகியவை தலா 0.5 சதவிகிதம் சரிந்தன.

இதனிடையே, இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் நேற்று மாலை அறிவித்ததைத் தொடர்ந்து, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் பல்வேறு அழுத்தத்திற்கு உள்ளாகின.

முதல் காலாண்டு வருவாய்க்குப் பிறகு மாரிகோ பங்குகள் 1.5 சதவிகிதம் சரிந்தன. புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ராஜீவ் ஆனந்தை நியமிக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்ததால் இண்டஸ்இண்ட் வங்கி பங்குகள் உயர்ந்தன.

பிளாக் டீல் மூலம் 1.86 கோடி பங்குகள் கைமாறிய பிறகு பேடிஎம் பங்குகள் 2% சரிந்தன. முதல் காலாண்டு ஒருங்கிணைந்த லாபம் 140% உயர்ந்ததால் போஷ் பங்குகள் 52 வார உச்சத்தை எட்டியது.

பலவீனமான வருவாயால் திரிவேணி டர்பைன் பங்குகள் 8% சரிந்தன. முதல் காலாண்டு ஒருங்கிணைந்த லாபம் 55% உயர்ந்ததால் காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா பங்குகள் 10% உயர்ந்தன.

காட்ஃப்ரே பிலிப்ஸ், விஷால் மெகா மார்ட், ஜேகே சிமென்ட், டிவிஎஸ் மோட்டார், ஆதித்யா பிர்லா கேபிடல், ஹிட்டாச்சி எனர்ஜி, ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், ஸ்டார் சிமென்ட், சிசிஎல் தயாரிப்புகள், போஷ் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தை எட்டியது.

இன்றைய வர்த்தகத்தில் 3,065 பங்குகள் வர்த்தகமான நிலையில் 1,200 பங்குகள் உயர்ந்தும் 1,784 பங்குகள் சரிந்தும் 81 பங்குகள் மாற்றமின்றி வர்த்தகமானது.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு, ஹாங்காங்கின் ஹேங் செங் மற்றும் ஜப்பானின் நிக்கி 225 குறியீடு ஆகியவை உயர்ந்து முடிந்தன.

ஐரோப்பிய சந்தைகள் உயர்ந்து வர்த்தகமாயின. அதே வேளையில் அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) உயர்ந்து முடிந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.02 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 68.06 அமெரிக்க டாலராக உள்ளது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.2,566.51 கோடி மதிப்புள்ள பங்குகளை நேற்று (திங்கள்கிழமை) விற்றுள்ளனர். அதே வேளையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.4,386.29 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

இதையும் படிக்க: ஆதித்யா பிர்லா கேபிடல் நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பு!

A flat start and the indices came under pressure post recent statements from the US President, with Nifty slipping below 24,600.

ஆயிரம் ஃபாலோயர்ஸ் இல்லாதவர்களுக்கு நேரலை கிடையாது: இன்ஸ்டாகிராம் புதிய விதி!

இன்ஸ்டாகிராம் செயலியில் நேரலை அம்சத்தை பயன்படுத்துபவர்களுக்கு அந்நிறுவனம் வரைமுறைகளை விதித்துள்ளது. இதன்படி, ஒரு கணக்கை ஆயிரம் பேர் பின்தொடர வேண்டியது (ஃபாலோயர்ஸ்) கட்டாயம் என இன்ஸ்டாகிராம் அறிவித்துள... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.87.82 ஆக நிறைவு!

மும்பை: புதுதில்லி தொடர்ந்து ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்வதால் இந்தியப் பொருட்களுக்கான வரிகளை உயர்த்துவதாக தனது அச்சுறுத்தலை மீண்டும் புதுப்பித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் ... மேலும் பார்க்க

டிரம்ப் அச்சுறுத்தல்: சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச் சந்தை!

இந்திய பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியதில் இருந்து சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றது.வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை காலை முதலே உயர்வுடன் வர்த்தகமாகின. இ... மேலும் பார்க்க

ரூ. 75,000 -ஐ நெருங்கும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 600 அதிகரித்துள்ளது.கடந்த வாரம் ஏற்றத் தாழ்வுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை வார இறுதி நாளான சனிக்கிழமை, சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந... மேலும் பார்க்க

உச்சம் தொட்ட ஆப்பிள் இந்தியா வருவாய்!

ஐ-போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிளின் இந்திய வருவாய் கடந்த ஜூன் காலாண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2025 ஏப்ரல... மேலும் பார்க்க

ஆதித்யா பிர்லா கேபிடல் நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பு!

புதுதில்லி: ஆதித்யா பிர்லா கேபிடல் லிமிடெட் நிறுவனம் 2025 ஜூன் உடன் முடிவடைந்த முதல் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த லாபம் 10 சதவிகிதம் உயர்ந்து ரூ.835 கோடியாக உள்ளது என்றுது.இதுவே ஒரு வருடத்திற்கு முன்ப... மேலும் பார்க்க