செய்திகள் :

உத்தரகாண்ட் வெள்ளம்: 'பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்'- பிரதமர் மோடி

post image

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தரலி என்ற பகுதியில் பெரும் மேகவெடிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து அங்குள்ள கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.

உத்தரகாசியில் காட்டாற்று வெள்ளம்...
உத்தரகாசியில் காட்டாற்று வெள்ளம்...

இந்த திடீர் வெள்ளப்பெருக்கில், குடியிருப்புகள், பொதுமக்கள் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். வரலாறு காணாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. பலர் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். " உத்தரகாசியில் நடந்த இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பணிவுடன் இரங்கலைத் தெரிவிக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக நான் பிரார்த்திக்கிறேன்.

மாநில முதல்வர் திரு புஷ்கர் தாமி ஜியிடம் தொடர்பு கொண்டு நிலைமை குறித்து விசாரித்தேன். மாநில அரசின் மேற்பார்வையில் மீட்பு மற்றும் நிவாரண படைகள் முழு முயற்சியுடன் செயல்பட்டு வருகின்றன. மக்களுக்கு உதவ அரசு எந்தவித தடையும் விதிக்கவில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Uttarakhand: உத்தரகாசியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம்; 10-க்கும் மேற்பட்டோர் மாயம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தரலி என்ற பகு... மேலும் பார்க்க

இல்லாத ஊருக்கு சிறப்பு பேருந்து, பாேலீஸ் பாதுகாப்பு, வருவாய் அலுவலர் தந்த பாஸ் - சோக காட்சிகள்

கடந்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி வயநாட்டின் சூரல்மலை பகுதியில் வரலாறு காணாத ஊருள்பொட்டல் - நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் புஞ்சிறிமட்டம், முண்டகை, சூரல்மலை என மூன்று கிராமங்கள் இயற்கையின் கோரத்திற்கு இறையாக... மேலும் பார்க்க

Tsunami: 20 லட்சம் பேர் வெளியேற்றம்; போர் கால நடவடிக்கைகள் - திகில் இரவை எதிர்கொள்ளும் ஜப்பான்!

ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்துக்கு அருகில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான், சீனா, கொலம்பியா, ஈக்குவேடார் ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்ய... மேலும் பார்க்க

Tsunami: ஜப்பான், ரஷ்யாவில் சுனாமி; உணவு பாதுகாப்பு குறித்து அதிகாரிகளின் விளக்கம் என்ன?

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, பசிபிக் பெருங்கடல் முழுவதும் சுனாமி அலைகள் ஏற்பட்டுள்ளன. ரஷ்யாவின் கடற்கரைப் பகுதிகளில் உள்ள கட்டடங்களுக்க... மேலும் பார்க்க

Tsunami: அமெரிக்காவின் ஹவாய் தீவுகளைத் தாக்கிய சுனாமி; பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக அங்கு சுனாமி தாக்கிய நிலையில், அமெரிக்காவின் ஹவாய் தீவுகளை சுனாமி தாக்கியிருக்கிறது.ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்திற்கு அருகே இன்று (ஜூலை 30,... மேலும் பார்க்க

Wayanad: காண்போரைக் கலங்க வைத்த வயநாடு நிலச்சரிவின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி! | Photo Album

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEkவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டே... மேலும் பார்க்க