அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!
Uttarakhand: உத்தரகாசியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம்; 10-க்கும் மேற்பட்டோர் மாயம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தரலி என்ற பகுதியில் பெரும் மேகவெடிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து அங்குள்ள கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கில், குடியிருப்புகள், பொதுமக்கள் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். வரலாறு காணாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.
இதுவரை 10 -க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மலை உச்சியில் இருந்து காட்டாற்று வெள்ளம் வேகமாக தரலி கிராமத்தை நோக்கி ஓடி வரும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
I haven't seen such a flash flood in my whole life.
— JAYDIP (@jaydipsaid) August 5, 2025
Prayer for the civilians #Uttarkashipic.twitter.com/bvfOq7kLZL
வெள்ளத்தில் இருந்து தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் உயரமான மற்றும் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.