செய்திகள் :

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

post image

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்சி முடிவதற்குள் சில முக்கிய திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க திமுக அரசு முயற்சித்து வருகிறது. சமீபத்தில் இரு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகிற ஆக. 14 ஆம் தேதி(வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழக அரசின் அடுத்த கட்ட திட்டங்கள், தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து விவாதித்து முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamil Nadu cabinet meeting will be held on August 14th under the chairmanship of Chief Minister M.K. Stalin in Chennai.

இதையும் படிக்க | நீதிமன்றம் கண்டனம்: இது கட்சிகளின் ஜனநாயக உரிமை! - ராகுலுக்கு இந்தியா கூட்டணி ஆதரவு

ஆக. 21 மதுரையில் தவெக மாநாடு: விஜய்

மதுரையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறும் என விஜய் அறிவித்துள்ளார். மேலும் பார்க்க

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

கார் விபத்து தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்த முயற்சித்ததாக தொடரப்பட்ட தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை ஆதீனம் மனு தாக்கல் செய்துள்ளார்.கடந்த மே 2 ஆம் தேதி ... மேலும் பார்க்க

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் வரும் ஆக. 9 ஆம் தேதி திறந்துவைக்கவுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் இ... மேலும் பார்க்க

கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட்!

தமிழத்தில் கோவை, நீலகிரியில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,• தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள... மேலும் பார்க்க

உதகைக்கு விரைந்த பேரிடர் மீட்புக் குழுவினர்!

உதகையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தடைந்தனர். ஆய்வாளர் தீபக் தலைமையினலான 10 பேர் கொண்ட குழு உதகையை வந்தடைந்தனர்.வால்பாறையில் ஏற்கெனவே ... மேலும் பார்க்க

ராமதாஸ் வீட்டில் செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக காவல்துறையில் புகார்!

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வீட்டில் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கோட்டக்குப்பம் டி.எஸ்.பி -க்கு இன்று(செவ்வாய்க்கிழமை) புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ராமதாஸின் தனிச்செயலர் பி.சுவா... மேலும் பார்க்க