ம.பி: கோயிலில் கூட்டநெரிசல்! 2 பெண் பக்தர்கள் பலி... 5 பேர் படுகாயம்!
Tamannaah: 'நான் விராட் கோலியைக் காதலித்தேனா?'- நடிகை தமன்னா அளித்த விளக்கம் என்ன?
பல வருடங்களுக்கு முன்பு நடிகை தமன்னாவும், விராட் கோலியும் காதலித்து வருவதாக வதந்திகள் பரவின. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுதொடர்பாக தமன்னா விளக்கம் அளித்திருக்கிறார்.

``இதுபோன்ற வதந்திகளைப் பார்த்து எனக்கு கஷ்டமாக இருந்தது. நான் விராட் கோலியை ஒரே ஒரு முறைதான் சந்தித்திருக்கிறேன். அதுவும் ஷூட்டிங்கிற்காக. அதன் பிறகு நான் விராட்டை பார்க்கவே இல்லை.
ஷூட் முடிந்த பிறகு நான் அவரிடம் பேசியதும் இல்லை. அப்படி இருக்கும்போது நாங்கள் டேட் செய்ததாக வதந்திகளைப் பரப்பிவிட்டார்கள்.

வதந்திகளை சமாளிப்பது கடினம். இதுபோன்ற விஷயங்கள் எனக்கு அதிக சங்கடத்தைத் தரும். எனினும் இவற்றை கட்டுப்படுத்த முடியாது. மக்கள் நினைக்க விரும்புவதை நினைக்கட்டும்" என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...