பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரம்- நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எ...
A.R.Rahman: ``ஒரு தந்தையாக பெருமை கொள்கிறேன் ரஹீமா'' - மகள் குறித்து பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்
புகழ்பெற்ற இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் - சாயிரா பானு தம்பதிக்கு கதீஜா, ரஹீமா என்ற இரண்டு மகள்களும் ஏ.ஆர் அமீன் என்ற மகனும் உள்ளனர். இதில் கதீஜா இசையமைப்பாளராகவும், ஏ.ஆர் அமீன் பாடகராகவும் வலம் வருகின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மானின் பிள்ளைகளில் திரையுலகத்துடன் தொடர்பில்லாமல் இருப்பவர் ரஹீமா. இவர் சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள பிரபல கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில், தற்போது அவர் தன் படிப்பை முடித்திருக்கிறார். அதற்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
மகள் கல்லூரி படிப்பு முடிந்ததும் பட்டம் பெற்றுள்ளதை, தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ``என் லிட்டில் பிரின்சஸ் ரஹீமா, Hospitality, Entrepreneurship, Innovation ஆகியவற்றில் கவனம் செலுத்தி கிளியன் உயர் கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றுள்ளார். ஒரு தந்தையாக பெருமைப்படுகிறேன். அல்ஹம்துலில்லாஹ்" எனப் பதிவிட்டிருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் பதிவைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பலரும் ரஹீமாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திரைப்பட இயக்குனர் பிரிட்டன் அம்புரோஸ், ``உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் ரஹீமா. இங்கிலாந்துக்கு வாருங்கள். நாம் ஒன்றாகக் கொண்டாடலாம்" என தன் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.
ரஹீமா தனது முதுகலைப் பட்டத்தை முடித்து, துபாயில் உள்ள சர்வதேச சமையல் கலை மையத்தில் பட்டப்படிப்பில் இளங்கலைப் பட்டத்தையும் முடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...