செய்திகள் :

இமாச்சல் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 10 மாதக் குழந்தை நீதிகா: மாநிலத்தின் குழந்தையாக அறிவிப்பு

post image

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் மீட்கப்பட்ட 10 மாதக் குழந்தை நீதிகாவை, மாநிலத்தின் குழந்தையாக அரசு அறிவித்து, அவரது வாழ்க்கை, கல்வி என அனைத்துக்கும் அரசே பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.

தல்வாரா கிராமத்தில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1ஆம் தேதி நேரிட்ட பயங்கர வெள்ளத்தின்போது, தனது பெற்றோர் மற்றும் பாட்டியை இழந்த இந்தக் குழந்தை மீட்புப் படையினரால் மீட்கப்பட்டிருந்தது.

இந்தக் குழந்தையின் தந்தை ரமேஷ் பலியான நிலையில், அவரது தாய் ராதா, பாட்டியின் நிலை என்னவானது என்பது இதுவரை தெரியவில்லை. அவர்கள் இதுவரை திரும்பாத நிலையில் உடலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், இமாச்சல மாநிலத்தின் முதல்வர் சுக்-ஆஷ்ரய் யோஜனா திட்டத்தின் கீழ், நீதிகா, மாநிலத்தின் குழந்தையாக அறிவிக்கப்பட்டார்.

இந்தக் குழந்தையை வளர்த்தெடுப்பது, கல்வி மற்றும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவது மாநிலத்தின் கடமை என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கை எட்டியதால் போர் நிறுத்தம்; அழுத்தத்தால் அல்ல! ராஜ்நாத் சிங்

இந்திய ராணுவம் தனது இலக்கை முழுமையாக எட்டியதால்தான் தாக்குதலை நிறுத்தினோம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தெரிவித்தார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன்... மேலும் பார்க்க

உ.பி. வரலாற்றில் புதிய சாதனை படைத்தார் யோகி ஆதித்யநாத்! 8 ஆண்டுகள், 4 மாதங்கள், 10 நாள்கள்!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் வரலாற்றில், முதல்வர் யோகி ஆதித்யநாத், மிக நீண்ட காலம் முதல்வராக பதவி வகித்து புதிய சாதனை படைத்துள்ளார்.திங்கள்கிழமையுடன், அவர் உத்தரப்பிரதேச முதல்வராக பதவியேற்று 8 ஆண்டுகள், ... மேலும் பார்க்க

வாடகைத் தாய் குழந்தை முறையில் இப்படி ஒரு மோசடியா? ஒரு குழந்தை ரூ.35 லட்சம்!

ஹைதராபாத்: செகுந்தராபாத்தில் செயல்பட்டு வந்த கருவுறுதல் மையத்தில், ஐவிஎஃப் முறையில், வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்ள விரும்பிய தம்பதியை ஏமாற்றிய ஒரு கும்பல் பற்றிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் அஸ்ஸாம் முதல்வர் சந்திப்பு!

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பிரதமர் நரேந்திர மோடியை புது தில்லியில் சந்தித்துப் பேசினார். இதுதொடர்பாக முதல்வரின் எக்ஸ் தளப் பதிவில், புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் பாக... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு - காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.அவர்கள் மூவரும், கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப... மேலும் பார்க்க

உ.பி. கோவிலில் கூட்டநெரிசல்: இருவர் பலி; 30 பேர் காயம்!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோவிலில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட கூட்டநெரிசலில் இரண்டு பேர் பலியாகினர். மேலும், பெண்கள், குழந்தைகள் உள்பட 30 பேர் காயமடைந்தனர்.பாராபங்கி மாவட்டத்தில் உள்ள ஔசனேஷ்வர் மகாத... மேலும் பார்க்க