செய்திகள் :

Operation Mahadev: ``ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்..'' - இந்திய ராணுவம் சொல்வதென்ன?

post image

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி, பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்தது.

இதற்கு பதிலடியாக, இந்தியா 'ஆபரேஷன் சிந்தூரை' நடத்தி, பாகிஸ்தானில் இருந்த 9 தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்தது.

மே 7-ம் தேதி தொடங்கிய இந்தத் தாக்குதல், பாகிஸ்தான் எதிர்வினையாற்ற, மே 10-ம் தேதி வரை தொடர்ந்தது. இரு நாடுகளும் பேசி, மே 10-ம் தேதி இந்தத் தாக்குதலை இறுதிக்கு கொண்டு வந்தது.

Operation Mahadev: இந்திய ராணுவம்
Operation Mahadev: இந்திய ராணுவம்

இன்று இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "ஆபரேஷன் மஹாதேவ். லிட்வாஸின் பொது பகுதியில் ஆபரேஷன் தொடர்ந்து வருகிறது" என்று முதலில் பதிவிட்டிருந்தது.

அடுத்த பதிவில், 'தீவிர சண்டையில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இன்னும் ஆபரேஷன் தொடர்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் இருக்கு லிட்வாஸ் பகுதியில் தற்போது ஆபரேஷன் மஹாதேவ் என்ற பெயரில் தீவிரவாதிகளைக் குறி வைத்து வருகிறது இந்திய ராணுவம்.

தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்று நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

"காவலர்கள் புகழடைய என்னை அசிங்கப்படுத்துகின்றனர்" - கண் கலங்கிய மன்சூர் அலி கான்; பின்னணி என்ன?

பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்னையில் மன்சூர் அலி கான் மகன் மீது, 67 வயது நபரை மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தன் மீது களங்கம் ஏற்படுத்தவே தனது மகன் மீது வழக்குப்பதிவ... மேலும் பார்க்க

Modi TN Visit: "திமுக, பாஜக-வின் அரசியல் ஆதாய நாடகத்தை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்" - தவெக விஜய்

தி.மு.க.. பா.ஜ.க.வின் அரசியல் ஆதாய நாடகத்தைத் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று தவெக தலைவர் விஜய் கூறியிருக்கிறார்அவர் வெயிட்டிருக்கும் அறிக்கையில், "கங்கை கொண்டான் கடாரம் வென்றான் என்று பெயர் பெற்ற,... மேலும் பார்க்க

Operation Sindoor: `தாக்குதலுக்கு யார் பொறுப்பு? யாரிடம் சரணடைந்தீர்கள்?’ - காங்கிரஸ் காட்டம்

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகள் விவாதம் கோரும் முக்கிய விவகாரங்களில் ஒன்று ஆபரேஷன் சிந்தூர். ஜூலை 21-ம் தேதி கூட்டத்தொடர் தொடங்க, பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்த... மேலும் பார்க்க

"ஒருபோதும் அதிமுகவைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்" - கண்ணீருடன் ராஜேந்திர பாலாஜி; பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி “மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பிரசார பயணம் மேற்கொள்ள உள்ளார்.இதற்கான ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிவகாச... மேலும் பார்க்க

Rajendra Balaji: “என்னைக் குறி வைக்கின்றனர்” - கண்ணீர் விட்டு அழுத ராஜேந்திர பாலாஜி; என்ன நடந்தது?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிடுவேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்ணீர் மல்கப் பேசியிருக்கிறார்.சிவகாசி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்ன... மேலும் பார்க்க

Op Sindoor : `பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக்கொண்டு, நம்மிடம் பேசினார்கள்’ - ராஜ்நாத் சிங் முழு உரை

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகள் விவாதம் கோரும் முக்கிய விவகாரங்களில் ஒன்று ஆபரேஷன் சிந்தூர். ஜூலை 21-ம் தேதி கூட்டத்தொடர் தொடங்க, பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்த... மேலும் பார்க்க