செய்திகள் :

12,000 ஊழியர்கள் பணிநீக்கம்: டிசிஎஸ்

post image

புதுதில்லி: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 12,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்ததைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு, வளர்ச்சியானது தற்போது முன்னுரிமையாக உள்ளது. வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை போன்ற முயற்சிகள் வேலை உருவாக்கத்தை எவ்வாறு அதிகரிக்க உதவும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். அதே நேரத்தில் திறன் மேம்பாடு மற்றும் மறு திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முழு சூழ்நிலையையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. அதே வேளையில் கவலை கொண்டுள்ளது. அடிப்படைக் காரணங்களைப் புரிந்துகொள்வதும் ஏன் இப்படி நடைபெறுகிறது என்பதனையும் ஆராயும்.

நாடு முழுவதும் அதிக பணியாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்களில் டிசிஎஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ள நிலையில், தற்போது பணிநீக்கம் குறித்த அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ் இந்த ஆண்டு 12,261 ஊழியர்களை ஆதாவது அதன் உலகளாவிய பணியாளர்களில் 2 சதவிகிதத்தை பணிநீக்கம் செய்ய போவதாக தெரிவித்ததால் இந்த நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. இதன் பெரும்பகுதி நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களாக கருதப்படுகிறது. இந்த நடவடிக்கை ஏப்ரல் 2025 முதல் மார்ச் 2026 வரை படிப்படியாக அமல்படுத்தப்படும்.

ஜூன் 30, 2025 நிலவரப்படி பணியாளர்களின் எண்ணிக்கை 6,13,069 ஆக உள்ளது. சமீபத்தில் முடிவடைந்த முதல் காலாண்டில் மேலும் 5,000 ஊழியர்களை அதிகரித்ததுள்ளது டிசிஎஸ்.

தொழில்நுட்பத்தில் முதலீடுகள், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, சந்தை விரிவாக்கம் மற்றும் பணியாளர் மறுசீரமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் நிறுவனமாக மாறுவதற்கான நிறுவனத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது.

எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் நிறுவனமாக மாறுவதற்கான பயணத்தில் பல புதிய தொழில்நுட்பத்தில் முதலீடு செய்தல், புதிய சந்தைகளில் நுழைதல், வாடிக்கையாளர்களுக்கும் எங்களுக்குமான செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல், வாடிக்கையாளர் கூட்டாணியை ஆழப்படுத்துதல், அடுத்த தலைமுறைக்கான உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் ஊழியர் மறுசீரமைப்பு செய்தல் உள்ளிட்ட முயற்சிகள் இதில் அடங்கும்.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் குறைந்து ரூ.86.67ஆக நிறைவு!

TCS decision to lay off over 12,000 employees has raised eyebrows.

இந்தியாவில் மின்னணு முறையில் பணப் பரிவர்த்தனை 10.7% உயர்வு!

மும்பை: நாடு முழுவதும் மின்னணு முறையில் பணப்பரிமாற்றம் ஆண்டுக்கு ஆண்டு 10.7 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஆன்லைன் பரிவர்த்தனைகளை ஏற்றுக்கொள்வதை அளவிடும் ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பேமெண்ட்ஸ் இன்டெக்ஸ் க... மேலும் பார்க்க

குறைந்த விலையில் நிறைவான அம்சங்கள் கொண்ட ரெட்மி நோட் 14 எஸ்இ!

ரெட்மி நிறுவனத்தின் நோட் 14 எஸ்இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அறிமுகமான ரெட்மி நோட் 14 5ஜி, ரெட்மி நோட் ப்ரோ 5ஜி, ரெட்மி நோட் ப்ரோ பிளஸ் 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்கள் உள்... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் குறைந்து ரூ.86.67ஆக நிறைவு!

மும்பை: டாலர் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 15 காசுகள் குறைந்து ரூ.86.67 ஆக முடிந்தது.ஆகஸ்ட் 1 காலக்கெடுவிற்கு முன்னதாக, இந்த... மேலும் பார்க்க

அதிக பேட்டரி! ... ஓப்போ ரெனோ 14 வரிசையில் புது ஸ்மார்ட்போன்!

ஓப்போ ரெனோ 14 வரிசையில் புதிய ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. ஓப்போ ரெனோ 14 எஃப் என்ற புதிய ஸ்மார்ட்போன் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அதை விட கூடுதல் அம்சங்களுடன்... மேலும் பார்க்க

3வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

மும்பை: இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகள் எதிர்மறையாகத் தொடங்கி நிஃப்டி 156.10 புள்ளிகளும், சென்செக்ஸ் 572.07 புள்ளிகள் சரிந்து முடிவடைந்தன. ஜூன் 13 க்குப் பிறகு முதல் முறையாக நிஃப்டி 24,700 புள்ளிகளுக்... மேலும் பார்க்க

5 போயிங் 737 விமானங்களை குத்தகைக்கு எடுக்கும் ஸ்பைஸ்ஜெட்!

புதுதில்லி: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஐந்து போயிங் 737 விமானங்களை குத்தகைக்கு எடுப்பதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அக்டோபர் மாதத்தில் விமானங்களை இணைக்கவும் திட்டமிட்டுள்ளதாக த... மேலும் பார்க்க