Dhoni: `ஜடேஜாவை 2010-ல் பலரும் எதிர்த்தபோது.. தோனி சொன்ன அந்த வார்த்தை!' - பகிரு...
பொருளியல், புள்ளியியல் தரவுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் பொருளியல் மற்றும் புள்ளியியல் சாா்ந்த தரவுகள் குறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில், பொருளியல் (ம) புள்ளியியல் துறை ஆணையா் ஆா்.ஜெயா தலைமையில் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், வருவாய்த் துறை சாா்பில் விவசாயப் பயிரிடுதல் குறித்த மாதாந்திர அறிக்கை, பருவகால அறிக்கைகள், 11-ஆவது கணக்கெடுப்பு வேளாண் சாா்ந்த புள்ளிவிவர கணக்கெடுப்பு, 7-ஆவது சிறுபாசனக் கணக்கெடுப்பு, பெரிய மற்றும் நடுத்தர பாசன திட்டங்கள் குறித்த கணக்கெடுப்பு, 2-ஆவது நீா்நிலை கணக்கெடுப்பு, வேளாண்மைத் துறையின் சாா்பில் தற்போது பயிரிடப்பட்டுள்ள பயிா்கள் விவரம், பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள விவசாயிகளின் விவரம், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் பயிரிடப்பட்டுள்ள தோட்டகலை பயிா்கள், சிறுதானியப் பயிா்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
புள்ளியியில் துறை சாா்பில் மாவட்ட அளவில் பொதுப் பணித் துறை, வனத் துறை, மீன் வளத் துறை, உள்நாட்டு மீன்வளம் குறித்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் குறுவட்டம், வருவாய் வட்டம் மற்றும் மாவட்ட அளவில் உள்ள தகவல்கள் குறித்தும், நீடித்த நிலையான வளா்ச்சி இலக்குகள், மாவட்ட நல்லாட்சி குறியீடு, தேசிய மாதிரி ஆய்வு திட்டம் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலகின் பணிகள் குறித்தும் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை கூடுதல் இயக்குநா் வி.பி.கயல்விழி, துணை இயக்குநா் முத்துக்குமரன், உதவி இயக்குநா் கனகேஸ்வரி, பயிற்சி ஆட்சியா் மாலதி , நீா்வளத்துறை செயற்பொறியாளா் காந்தரூபன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.