என்ன, 4,000 டன் நிலக்கரியைக் காணவில்லையா? மேகாலயா அமைச்சர் சொல்லும் அதிர்ச்சி பத...
Dhoni: `ஜடேஜாவை 2010-ல் பலரும் எதிர்த்தபோது.. தோனி சொன்ன அந்த வார்த்தை!' - பகிரும் பத்திரிகையாளர்
இங்கிலாந்து vs இந்தியா நடப்பு டெஸ்ட் தொடரில் பேட்ஸ்மேன்கள், பவுலர்களைத் தாண்டி இரண்டு ஆல்ரவுண்டர்கள் அபாரமாக ஆடி வருகின்றனர்.
ஒருவர் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ். இன்னொருவர் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா.
இந்த டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளிலும் ஆடியிருக்கும் ஜடேஜா, ஒரு சதம் மற்றும் தொடர்ச்சியாக 4 அரைசதங்கள் உட்பட 454 ரன்கள் அடித்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார். பவுலிங்கில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார்.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் கடைசி நாளில் 82 - 7 விக்கெட்டுகளை இழந்து இந்தியாவின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகியிருந்த நிலையில், நிதிஷ் குமார் ரெட்டி, பும்ரா, சிராஜ் ஆகியோருடன் 50 ஓவர்கள் நின்று 181 பந்துகளில் 61 அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இங்கிலாந்தின் வெற்றியைத் தாமதப்படுத்தினார்.
நான்காவது டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தருடன் 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, சதமடித்து இங்கிலாந்தின் வெற்றியைப் பறித்து டிரா செய்திருப்பார்.
இது தவிர இங்கிலாந்தில் தொடர்ச்சியாக அதிக அரைசதங்கள் இந்தியர்கள் பட்டியலில் பண்ட்டுக்கு அடுத்தபடியாக கங்குலியுடன் ஜடேஜா இணைந்திருக்கிறார்.
மேலும், இங்கிலாந்தில் 30+ விக்கெட்டுகளும், 1000+ ரன்களும் அடித்த முதல் இந்திய வீரராகவும், ஒட்டுமொத்த அளவில் மூன்றாவது வீரராகவும் திகழ்கிறார்.

இதுமட்டுமல்லாமல், இங்கிலாந்தில் பேட்டிங் வரிசையில் 6 அல்லது அதற்கு கீழ் வரிசையில் இறங்கி அதிக அரைசதங்கள் அடித்த வீரராக (9 அரைசதங்கள்) சோபர்ஸுடன் (ஆஸ்திரேலியா) முதலிடம் பகிர்ந்திருக்கிறார்.
கடைசி டெஸ்ட் போட்டியில் ஒரு அரைசதம் அதையும் முழுதாக தனதாக்கிவிடுவார். இவ்வாறு, பேட்டிங், பவுலிங் என எக்கச்சக்க சாதனைகளை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறார் ஜடேஜா.
இந்த நிலையில் விக்ரம் சந்திரா எனும் பத்திரிகையாளர், 2010-ல் ஜடேஜா குறித்து தோனி தன்னிடம் கூறியதைத் தற்போது எக்ஸ் தளத்தில் நினைவுகூர்ந்திருக்கிறார்.
I’m thinking back to an interview I did with @msdhoni in 2010. @imjadeja was failing in match after match and there were loud calls that he be dropped.
— Vikram Chandra (@vikramchandra) March 6, 2022
Dhoni told me - “ We need to have patience. One day Jadeja will be the all-rounder that India needs”
அந்தப் பதிவில் விக்ரம் சந்திரா, "2010-ல் தோனியுடன் நான் எடுத்த நேர்காணலை நினைத்துப் பார்க்கிறேன்.
அப்போது, அடுத்தடுத்த போட்டிகளில் ஜடேஜா தோல்வியடைந்து கொண்டிருந்தார். அணியிலிருந்து அவரை நீக்க வேண்டும் என்று பலத்த குரல்கள் எழுந்தன.
அந்த சமயத்தில் தோனி என்னிடம், `நாம் பொறுமையாக இருக்க வேண்டும். ஒருநாள் இந்தியாவுக்குத் தேவைப்படும் ஆல்ரவுண்டராக ஜடேஜா இருப்பார்' என்று கூறினார்" எனப் பதிவிட்டிருக்கிறார்.
நடப்பு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஜடேஜாவின் ஆட்டம் குறித்த உங்களின் கருத்துகளை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.