என்ன, 4,000 டன் நிலக்கரியைக் காணவில்லையா? மேகாலயா அமைச்சர் சொல்லும் அதிர்ச்சி பதில்!
மேகாலயத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த நான்கு ஆயிரம் டன் நிலக்கரி காணாமல் போனதாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, கனமழையில் நிலக்கரி அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அமைச்சர் பதிலளித்துள்ளார்.
மேகாலயத்தில் வழக்கமாக நாட்டின் பிற பகுதிகளைக் காட்டிலும் கனமழை பெய்வது வழக்கம்தான். ஆனால், இந்த உண்மையை, 4,000 டன் நிலக்கரி காணாமல் போன வழக்குக்கு பயன்படுத்திக் கொள்ள முயன்றிருக்கிறார் மாநில அமைச்சர். நிலக்கரி காணாமல் போன விவகாரத்தில் பொறுப்பின்றி செயல்படுவதாக அரசை உயர் நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது.