செய்திகள் :

3 ஆண்டுகளில்... வங்கிகளில் உரிமைகோரப்படாத வைப்புத்தொகை ரூ. 52,174 கோடி!

post image

பொதுத் துறை வங்கி மற்றும் தனியார் வங்கிகளில் கடந்த மூன்று நிதியாண்டுகளாக உரிமை கோரப்படாத வைப்புத்தொகை பணம், ரூ. 52,174 கோடியை எட்டியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வங்கிகளில் உள்ள வைப்புத்தொகை ரூ. 42,271 கோடியாக இருந்த நிலையில், 2022-2024 வரையிலான காலகட்டத்தில் ரூ. 52,174 கோடியாக உயர்ந்துள்ளது.

மாநிலங்களவையில் துணை நிதியமைச்சர் பங்கஜ் செளத்ரி எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த அறிக்கையில்,

2024 நிதியாண்டில், பொதுத் துறை வங்கிகளில் ரூ. 45,140.78 கோடி பணம், தனியார் துறை வங்கிகளில் ரூ. 7,033.82 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது.

இவை இந்திய ரிசர்வ் வங்கியால் பராமரிக்கப்படும் வைப்புத்தொகையாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு மாற்றப்பட்டன.

இதேபோன்று, 2022 முதல் 2024 வரையிலான நிதியாண்டில் காப்பீட்டு நிறுவனங்களில் உள்ள உரிமைகோரப்படாத தொகை ரூ. 21,718 கோடியாக உள்ளது.

ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கையின்படி, கோரப்படாத மொத்த வைப்புத்தொகை ரூ. 78,212.53 (2024 மார்ச் வரை) கோடியாக உள்ளது.

உரிமை கோரப்படாத வைப்புத்தொகை - தகவல்களை அணுகுவதற்கான அணுகுமுறை என்ற புதிய வலைதளத்தை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. அதில், பதிவு செய்யப்பட்ட எந்தவொரு பயனரும், உரிமைகோரப்படாமல் உள்ள தொகையில் அளவை, வங்கிகள் வாரியாகத் தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | அமேசான் சுதந்திர தின சலுகை ஜூலை 31 முதல் தொடக்கம்! என்னென்ன வாங்கலாம்?

he government revealed that unclaimed deposits with public sector banks (PSBs) and private sector banks (PVBs) rose to more than Rs 52,174 crore in three fiscals (2022-2024)

விவசாயிகளின் வருமானம் இரு மடங்கு அதிகரிப்பு: மத்திய அமைச்சர் சௌஹான்

வேளாண் துறையில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கை விட அதிகரித்துள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார்.விவசாயிகளின் வ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள பதில் வருமாறு:சொந்த வருவாய்க்காக கிராம பஞ்சாயத்துகளுக்கு உதவும் மத்திய திட்டங்கள... மேலும் பார்க்க

"ஆபரேஷன் சிந்தூர்': இரு அவைகளிலும் தமிழக எம்.பி.க்கள் அதிருப்தி

நமது சிறப்பு நிருபர்ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை விவகாரத்தில் மத்திய அரசு நடந்து கொள்ளும் விதத்துக்கு தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அத... மேலும் பார்க்க

புகழ்பெற்ற பொருளாதார நிபுணா் மேக்நாத் தேசாய் காலமானாா்

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த புகழ்பெற்ற பிரிட்டன் பொருளாதார நிபுணரும், அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான மேக்நாத் தேசாய் (85) செவ்வாய்க்கிழமை காலமானாா்.உடல்நல பாதிப்பு காரணமாக ஹரியாணா மாநிலம் கு... மேலும் பார்க்க

இன்று விண்ணில் பாய்கிறது ‘நிசாா்’ செயற்கைக்கோள்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து உருவாக்கிய ‘நிசாா்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் புதன்கிழமை (ஜூலை 30) மாலை விண்ணில் ஏவப்படவுள்ளது... மேலும் பார்க்க

12,000 பேரை பணி நீக்குவதாக டிசிஎஸ் அறிவிப்பு: நிலைமை கவனித்து வருவதாக மத்திய அரசு தகவல்

நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் 12,000-க்கும் மேற்பட்டோரை பணியில் இருந்து நீக்க இருப்பதாக அறிவித்துள்ளது ஊழியா்கள் மத்தியில் பெரும் அச்சத்த... மேலும் பார்க்க