ஹிந்துக்கள் ஒருபோதும் பயங்கரவாதிகளாக இருக்கவே மாட்டார்கள்! -அமித் ஷா
Pahalgam: இந்திய பணம் டு பாகிஸ்தான் சாக்லேட்; தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டவை - வெளியான லிஸ்ட்
ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் நேற்று ஜம்மு காஷ்மீரில் ஆபரேஷன் மகாதேவ் என்ற நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தினார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தின் போது உரையாற்றிய அமித் ஷா, ``நேற்று ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில் சுலைமான், ஆப்கான் மற்றும் ஜிப்ரான் என அடையாளம் காணப்பட்ட மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனார்.

சுலைமான் லஷ்கர் தளபதி என்றும், 26 அப்பாவிகள் கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதலில் அவருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் நம் பாதுகாப்பு அமைப்புகளிடம் இருக்கின்றன என்றும் தெரிவித்தார். மற்ற இருவரும் "ஏ-லிஸ்ட்" பயங்கரவாதிகள். நமது குடிமக்களைக் கொன்றவர்களும் கொல்லப்பட்டனர் என்பதை நாடாளுமன்றத்திற்கும் நாட்டுக்கும் நான் சொல்ல விரும்புகிறேன்" என்றார்.
அதைத் தொடர்ந்து இராணுவம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்களை பட்டியலிடிருக்கிறது. அதில்,
AK 47 - 9 (1 சேதமடைந்தது)
M4 துப்பாக்கிக்கான தோட்டாக்கள் - 371
காலியான கார்ட்ரிட்ஜ் (தோட்டா இருக்கும் பைகள்) - 7
கைக்குண்டு - 3
பை - 3
சோலார் சார்ஜர் 28 வாட் - 1
பைகள் - 2
கோப்ரோ ஹார்னஸ் (கேமராவை பொருத்தும் தோள்பட்டை பை)- 1
மொபைல் சார்ஜர் - 3
காஸ் - 1
ஆயுதங்களை சுத்தம் செய்யும் பிரஷ்- 3
பாராசிட்டமால் 650 - 22 மாத்திரைகள்
நெக்ஸோபில் டிஎஸ்ஆர் - 30 மாத்திரைகள்
ஊசி, நூலுடன் ரோல் - 1
சிகரெட் லைட்டர்கள் - 4
பவர் பேங்க் (சுவிஸ் மிலிட்டரி என்று எழுதப்பட்டுள்ளது) - 1
ஆதார் அட்டை (முகமது அஷ்ரஃப் கோஜர் C/o முகமது சாதிக் R/o அகல் கங்கன் கந்தர்பால்)
ஆதார் அட்டை (குலாம் மொஹிடின் R/o காசோலை தாரா ஸ்ரீநகர்)
நகம் வெட்டி - 1
ரூ.3,000 ரொக்கம்.... முன்னதாக, அமித் ஷா பேசுகையில், பாகிஸ்தானில் செய்யப்பட்ட சாக்லேட்டும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக குறிப்பிட்டார்.