செய்திகள் :

தமிழக பாஜக-வில் நிர்வாகிகள் மாற்றம்; குஷ்பு, கே.டி.ராகவனுக்கு என்ன பதவி? - முழு விவரம்!

post image

2026 மாநில சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் பல வியூகங்கள் வகுத்து யுத்திகளைக் கையாண்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக பாஜக-வில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

3 மாதங்களுக்கு முன்பு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை பதிவிக்காலம் நிறைவடைந்ததால், தமிழக பாஜக தலைவர் பதவி நயினார் நாகேந்திரனுக்குக் கொடுக்கப்பட்டது.

இன்று பல மாநில அளவிலான நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் ஒப்புதலுடன் இந்த நியமன விவரங்கள் வெளியிடப்படுவதாக நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

இன்றைய அறிவிப்பின்படி 14 மாநில துணைத் தலைவர்களுள் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் நடிகை குஷ்பு சுந்தர்.

பாஜக-வின் முன்னாள் பொதுச்செயலாளராக இருந்து வீடியோ சர்ச்சையில் சிக்கிய கே.டி.ராகவனுக்கு மாநில இணை அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மாநில துணைத் தலைவராக இருந்த நாராயணன் திருப்பதிக்கு மாநில தலைமை செய்தித் தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பாஜக மாநில நிர்வாகிகள் மாற்றம்:

பாஜக மாநில நிர்வாகிகள் மாற்றம்
பாஜக மாநில நிர்வாகிகள் மாற்றம்
பாஜக மாநில நிர்வாகிகள் மாற்றம்
பாஜக மாநில நிர்வாகிகள் மாற்றம்

'நிச்சயமாக கவினின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் '- நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த எம்.பி கனிமொழி

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவின்குமாரின் பெற்றோருக்கு நேரில் சென்று திமுக எம்பி கனிமொழி ஆறுதல் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கனிமொழி, "இப்படிபட்ட ஆணவப்படுகொலைகள் நடக்க... மேலும் பார்க்க

கனடா: பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் மூன்றாவது G7 நாடா? - விரிவான தகவல்கள்

செப்டம்பரில் பாலஸ்தீனத்தை தனி நாடாக கனடா ஏற்றுக்கொள்ளும் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்கு அடுத்ததாக கனடாவும் இந்த முடிவை எடுத்துள்ளது. இதன்மூலம், அண்மையி... மேலும் பார்க்க

Rahul தாக்கு; Modi பேச்சு - விடை தெரியாத பல கேள்விகள்! | Tsunami pahalgam Imperfect Show 30.7.2025

* மக்களவையில் ராகுல் காந்தி அடுக்கடுக்கான கேள்விகள்!* பிரதமர் பதவியை வகிக்கும் தகுதி உங்களுக்கு இல்லை." - மல்லிகார்ஜுன கார்கே* மத்திய அரசைச் சாடிய பிரியங்கா காந்தி!* “பஹல்காம் தாக்குதல் முழுக்க முழுக்... மேலும் பார்க்க

`234 தொகுதிகள்', `MY TVK' Vijay-க்கு காத்திருக்கும் Real Challenge! | Elangovan Explains

'234 தொகுதிகளிலும்' காத்திருக்கும் சவால்கள். இதை முறியடிக்க 'MY TVK' எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளார் விஜய். இரண்டு கோடி உறுப்பினர்கள், மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு, பயணம் என புதிய திட்டங்க... மேலும் பார்க்க

`பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வந்தது வரலாற்றுப் புரட்சி’ - ஓ.பன்னீர்செல்வம் திடீர் அட்டாக்

நேற்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 1999-ம் ஆண்டு பாஜக ஆட்சி கவிழ்த்தது குறித்து பேசியிருந்தார். அதாவது அது ஒரு வரலாற்று பிழை எனக் குறிப்பிட்டிருந்தார், இதற்கு எதிர்ப்... மேலும் பார்க்க