What to watch - Theatre: `உசுரே, Housemates, Meesha, Kingdom' - இந்த வார ரிலீஸ்!
3 ஆண்டு தடைக்குப் பின்... 39 வயதில் கம்பேக் தரும் ஜிம்பாப்வே வீரர்!
ஜிம்பாப்வே அணியின் லெஜெண்ட் பிரண்டன் டெய்லர் (39) மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட தேர்வாகியுள்ளார்.
நியூசிலாந்து அணி ஜிம்பாப்வே நாட்டுக்குச் சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
இதன் இரண்டாவது டெஸ்ட்டில் பிரண்டன் டெய்லர் இணையவிருக்கிறார்.
ஐசிசியின் ஊழல் மற்றும் ஊக்கமருந்து தடையின்படி 3.5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டார். கடந்த 2019-இல் ஸ்பாட்பிக்ஸில் ஈடுபட்ட இவருக்கு 2022-இல் தடைவிதிக்கப்பட்டது.
இதுமட்டுமில்லாமல் போதைப்பொருளை உட்கொண்டதால் இவருக்கு 2019-இல் 15,000 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
34 டெஸ்ட் போட்டிகளில் 2,320 ரன்கள் எடுத்துள்ளார். கடைசி டெஸ்ட் போட்டிகளில் 92, 81, 49 ரன்கள் என சிறப்பான ஃபார்மில் இருந்தார்.
கடினமாக உழைத்து மீண்டும் கம்பேக் அளித்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
205 ஒருநாள் போட்டிகளில் 6,684 ரன்கள் எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.