நாம் வென்று விட்டோம்..! கிங்டம் வசூல் வேட்டைக்கு விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி!
கடைசி டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா நிதானம்!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் இன்று (ஜூலை 31) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணி உணவு இடைவேளையின்போது, 2 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 ரன்கள் எடுத்தும், கே.எல்.ராகுல் 14 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.
சாய் சுதர்சன் 25 ரன்களுடனும், கேப்டன் ஷுப்மன் கில் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: இந்திய அணியின் சிறந்த கேப்டன்களை வரிசைப்படுத்திய அம்பத்தி ராயுடு; முதலிடம் யாருக்கு?
The Indian team has been playing a calm game in its first innings in the final Test against England.