செய்திகள் :

`கட்சி விதிப்படியே பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும்’ - எடப்பாடி மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்

post image

அதிமுக பொதுச் செயலாளராகத் தான் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை, சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.

இதை எதிர்த்தும், அந்த பொதுக்குழு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கூடவே, அ.தி.மு.க உறுப்பினர் எனக் கூறி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி, எடப்பாடி பழனிசாமியின் நியமனம் மற்றும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து உரிமையியல் வழக்கைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், `பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

சூரியமூர்த்தி தொடுத்த இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், சூரியமூர்த்தி அ.தி.மு.க உறுப்பினரே அல்ல என்றும், உறுப்பினராக இல்லாத ஒருவர் கட்சியின் செயல்பாடு குறித்து கேள்வியெழுப்ப முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவு
நீதிமன்ற உத்தரவு

மனு தள்ளுபடி

இத்தகைய சூழலில், இந்த மனுவை இன்று விசாரித்த உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சிவசக்திவேல் கண்ணன், "கட்சி விதிப்படி பொதுச்செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த விதிகளின்படி பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று தெரிவிக்கவில்லை என்பதால், இந்த வழக்கு விசாரணைக்குரியது எனக் கூறி, சூரியமூர்த்தியின் வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்" என்று உத்தரவிட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Malegaon Blast Case: 17 ஆண்டுகால விசாரணை - பாஜக-வின் பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேரும் விடுவிப்பு

கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்திற்கு உட்பட்ட மேலேகான் பகுதியில் உள்ள மசூதிக்கு அருகில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது . அப்பொழுது புனித ரம்ஜான் மாதம... மேலும் பார்க்க

`வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை' - தலைமை நீதிபதிக்கு பரிந்துரை!

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஸ்டெர்லைட், காவல் நிலைய மரணம், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக போராடியவர். மதுரை காமராசர் பல்கலைக்கழக முறைகேடு, அனைத்து சாதியினருக்கு அர்ச்சகர் பணி, திருப்பரங்க... மேலும் பார்க்க

`மக்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் தான்..!’ - OTP விவகாரத்தில் திமுக மேல்முறையீடு

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை அணுகும் வகையில் `ஓரணியில் தமிழ்நாடு' என்னும் பெயரில் திமுக உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வந்தது. இதன் ஒரு பகுதி... மேலும் பார்க்க

`மாறுவேடத்தில் மத்திய அரசு; குடியரசுத் தலைவருக்கே அனுப்புங்க’ - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு

தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பர்திவாலா மற்று... மேலும் பார்க்க

தொடர்ந்து அதிகரிக்கும் நாய்க்கடி சம்பவங்கள்... தாமாக முன்வந்து கையிலெடுத்த உச்ச நீதிமன்றம்!

குழந்தைகள் முதல் வயதானவர்கள் பலரும் தெருநாய்க்கடி சம்பவங்களால் பாதிக்கப்படுவதும், சில சமயங்களில் உயிரிழப்பதும் அனைத்து மாநிலங்களிலும் பெரும் பிரச்னையாக இருக்கிறது.இந்த நிலையில், தெருநாய்க்கடி விவகாரத்... மேலும் பார்க்க

மா.சுப்பிரமணியன் மீதான வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் முடிவா?

கடந்த 1995 ஆம் ஆண்டு சிட்கோ திட்டத்தின் கீழ் அதில் பணிபுரிந்த தொழிலாளியான கர்ணன் என்பவருக்கு அரசு தொழிலாளர்களுக்கான இடத்தை தமிழ்நாடு அரசு ஒதுக்கியிருந்தது.அரசு ஊழியருக்கு ஒதுக்கும் இடத்தை வேறு யாருக்க... மேலும் பார்க்க