ரூ.19 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
கூலி டிரைலர் வருவதால் எல்ஐகே டீசர் தேதி மாற்றம்..! ரசிகர்கள் கிண்டல்!
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள எல்ஐகே படத்தின் டீசர் தேதி மாற்றப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படத்தின் டிரைலர் நாளை (ஆக.2) வெளியாகவிருப்பதால் எல்ஐகே படத்தின் டீசர் ரிலீஸ் தேதியில் மாற்றப்பட்டதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
இது குறித்து படக்குழு தனது எக்ஸ் பக்கத்தில், “தலைவர் தரிசனம் கூலி டிரைலர், இசை வெளியீட்டுக்குப் பிறகு எல்ஐகே படத்தின் டீசர் வெளியீட்டு எப்போது என்ற புதிய தேதி அறிவிக்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.
The #FirstPunch of #LoveInsuranceKompany will now land a little later due to coolie audio & trailer launch.
— Seven Screen Studio (@7screenstudio) August 1, 2025
#VigneshShivan@pradeeponelife@IamKrithiShetty@iam_SJSuryah@anirudhofficial#RaviVarman@iYogiBabu@Gourayy@PradeepERagav@muthurajthangvl@PraveenRaja_Off… pic.twitter.com/7n5Jcq5yOA
இதற்கு ரசிகர்கள் அந்தப் பதிவில், “அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?”, “டீசர் தயாராகாமல் இப்படி சொல்கிறீர்களா?” எனக் கிண்டலாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகர் பிரதீப் ரங்கநாதனை வைத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்ஐகே) படத்தை இயக்கியுள்ளார்.
பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும் பிரதான கதாபாத்திரங்களில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ரௌடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இந்தப் படம் வரும் செப்.18ஆம் தேதி திரைக்கு வரவிருப்பதாக படக்குழு ஏற்கெனவே அறிவித்திருந்தது.