OPS : `டார்கெட் லிஸிட்டில் பாஜக; நிரந்தர எதிரி இல்லை எனில்..!’ - ஓ.பி.எஸ்ஸின் அட...
தி கேரளா ஸ்டோரி படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிப்பு
கேரளத்தில் கடும் எதிா்ப்பு எழுந்த தி கேரளா ஸ்டோரி படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறந்த இயக்குநர் சுதிப்தோ சென் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு பிரசந்தனு மொஹபத்ரா ஆகிய பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படம் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியானது.
இப்படத்துக்கு கேரளத்தில் கடும் எதிா்ப்பு கிளம்பியது.
அப்போது இந்தத் திரைப்படத்துக்கு எதிராக ஆளுங்கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எதிா்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவை போராட்டத்தில் ஈடுபட்டன.
தேசிய விருது பெற்ற கிங் கான்! சிறந்த நடிகராக ஜவான் ஷாருக்!
கேரளத்தைச் சோ்ந்த 32,000 பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மாற்றப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக அந்தத் திரைப்படத்தில் கூறப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.