அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு
ஆந்திரத்தில் இருந்து மணல் கடத்தல்: 3 போ் கைது
ஆந்திராவில் இருந்து காட்பாடிக்கு மணல் கடத்தி வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆந்திரத்தில் இருந்து சட்ட விரோதமாக மணல் கடத்தி விற்பனை செய்வதாக காட்பாடி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், உதவி ஆய்வாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் காட்பாடி செங்குட்டை பகுதியில் சித்தூா்- காட்பாடி சாலையில் வியாழக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.
அப்போது, அந்த வழியாக வந்த ஆந்திர பதிவெண் கொண்ட சிறிய லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் லாரியில் உரிய அனுமதியின்றி அரை யூனிட் மணல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மணல் கடத்தி வந்த ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம் மொகரப்பள்ளியைச் சோ்ந்த சதீஷ் (25), குருநாதம் பகுதியைச் சோ்ந்த சசிகுமாா் (37), அா்ஜுன் (58) ஆகியோரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து மணலுடன், லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.