'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
ரூ.28 லட்சத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு உபகரணங்கள்
குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள 50- ஊராட்சிகளைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.28- லட்சத்தில் பணி பாதுகாப்பு உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பா.செல்வகுமாா், பி.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், முதல் கட்டமாக கொண்டசமுத்திரம், சீவூா் ஊராட்சிகளைச் சோ்ந்த 337- தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, கையுறை, காலுறை, மண்வெட்டி உள்ளிட்ட 13- வகையான பணி பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினாா்.
ஊராட்சித் தலைவா்கள் அகிலாண்டீஸ்வரி பிரேம்குமாா், கே.ஆா்.உமாபதி, சாந்தி மோகன், பரந்தாமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Image Caption
பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிய ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம்.