செய்திகள் :

"இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது" - ட்ரம்ப் கருத்தை ஏற்ற ராகுல் காந்தி; முரண்பட்டாரா சசி தரூர்?

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவை "இறந்த பொருளாதரம்" என விமர்சித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார், அது எல்லோருக்குமே தெரிந்ததுதானே. பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும் மட்டுமே இது தெரியாது..." எனப் பேசியிருந்தார்.

Trump

இந்தியா மீது 25% வரி விதித்த ட்ரம்ப், இந்தியாவும் ரஷ்யாவும் "தங்கள் இறந்த பொருளாதாரங்களை ஒன்றாக வீழ்த்த முடியும்" எனப் பேசியிருந்தார்.

மோடி அதைக் கொன்றுவிட்டார்!

ராகுல் காந்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கருத்துக்களை ஆமோதிப்பதைப் பலரும் விமர்சித்தனர். இதற்கு விளக்கமளிக்கும் வகையில், "இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது. மோடி அதைக் கொன்றுவிட்டார்" எனப் பதிவிட்டிருந்தார்.

Rahul Gandhi
Rahul Gandhi

அதற்கான 5 காரணங்களை முன்வைத்தார், "1. அதானி-மோடி கூட்டு

2. பணமதிப்பிழப்பு மற்றும் குறைபாடுள்ள ஜிஎஸ்டி

3. "அஸ்ஸெம்பல் இன் இந்தியா" தோல்வியடைந்தது

4. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அழிக்கப்பட்டன

5. விவசாயிகள் நசுக்கப்பட்டனர்.

இங்கே எந்த வேலையும் இல்லை. இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி அழித்துவிட்டார்." எனக் கூறியிருந்தார்.

சசி தரூர் பேசியதென்ன?

இந்தியாவை இறந்த பொருளாதாரம் என ட்ரம்ப் குறிப்பிட்டது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் சசி தரூரிடம் கேட்கப்பட்டபோது, "அது அப்படி இல்லை என்பது எல்லோருக்குமே தெரியும்" எனப் பதிலளித்தார்.

அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து, "வர்த்தக பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன, வரிவிதிப்பு குறைய வாய்ப்பு உள்ளது. அப்படி நடக்கவில்லை என்றால் அது நமது ஏற்றுமதிகளைப் பாதிக்கும். அமெரிக்கா நமக்கு மிகப் பெரிய சந்தையாக உள்ளது.

அமெரிக்கா நம் தேவைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் மீதான நமது வரி சராசரியாக 17%. இது காரணமில்லாமல் போடப்பட்டது அல்ல" எனக் கூறியுள்ளார்.

தி கேரளா ஸ்டோரி: `சங் பரிவார சித்தாந்த கதைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்' - பினராயி விஜயன் காட்டம்

2023ம் ஆண்டு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 71வது தேசிய திரைப்பட விருதுகளின் அறிவிப்பு வெளியாகியிருக்கின்றன. அதில், இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்... மேலும் பார்க்க

OPS : `டார்கெட் லிஸிட்டில் பாஜக; நிரந்தர எதிரி இல்லை எனில்..!’ - ஓ.பி.எஸ்ஸின் அடுத்த திட்டம் என்ன?

பா.ஜ.க கூட்டணியின் ஓர் அங்கமாக இருந்தபோதிலும், ஓபிஎஸ்-க்குத் தொடர்ந்து முக்கியத்துவம் மறுக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்திக்க அவர் பலமுறை முயற்சி செ... மேலும் பார்க்க

`6.5 கோடி வாக்காளர் + 2 கோடி வடவர்; அகதியாகும் தமிழர்கள்’ - தேர்தல் ஆணயத்துக்கு சீமான் கண்டனம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்புத் திருத்தம் வழியாக 6.5 லட்சம் பீகார் மக்கள் தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் இணையக் கூடலாம் என்றும் நாடுமுழுவதும் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் தமிழகத்தில... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுடன் பேசிய ராமதாஸ்: `தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை’ - என்ன பேசினார்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் ராமதாஸிடம், இருவருக்குமான உரையாடல் குறித்தும், தேர்தல் கூட்டணியில் மாற்றம் இருக்குமா என்பது குறித்து... மேலும் பார்க்க

`ஓபிஎஸ் ஏன் இந்த முடிவை எடுத்தார்னு தெரியல; அவர் கேட்டிருந்தால்.!" - நயினார் நாகேந்திரன்

மதுரையில் நடந்த பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஏற்கனவே ஓபிஎஸ்ஸிடமும் தினகரனிடமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். சட்டமன்றத்தில் சந்... மேலும் பார்க்க

'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 முக்கிய செய்திகள்!

சௌதி அரேபியாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் விழுந்ததில் 23 பேர் காயமடைந்தனர்.கேரளா பள்ளிகளில் ஒரு மாத விடுமுறையை வெயில் காலத்துக்கு பதில் மழைக் காலத்தில் அளிப்பது குறித்து மக்களிடம் கருத்த... மேலும் பார்க்க