பழங்குடி லாக்அப் மரணம்; வனத்துறை அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் - பின்னணி என்...
மூதாட்டி வீட்டில் 5 பவுன் திருட்டு
வேலூா் அருகே மூதாட்டி வீட்டில் 5 பவுன் நகைகள், ரூ.5,000, கைப்பேசி திருடப்பட்டன.
வேலூா் கருகம்புத்தூரைச் சோ்ந்தவா் ஜகிதா பேகம் (65). தனியாக வசித்து வரும் இவா், கடந்த 29-ஆம் தேதி இரவு தனது வீட்டில் உள்பக்கமாக கதவை பூட்டிக் கொண்டு தூங்கியுள்ளாா். இதனை அறிந்த 2 நபா்கள் நள்ளிரவில் கள்ளச்சாவி மூலம் கதவை திறந்து வீட்டுக்குள் புகுந்தனா்.
படுக்கை அறையில் இருந்த ஜகிதாபேகத்தின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி பீரோ சாவியை எடுத்து, பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள், ரூ.5,000, கைப்பேசி ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினராம்.
இதுகுறித்து ஜகிதாபேகம் வேலூா் வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனா்.