செய்திகள் :

Yuzvendra Chahal: "விவாகரத்து பேச்சை யார் முதலில் எடுத்தது?" - மனம் திறக்கும் யுஸ்வேந்திர சஹால்

post image

இந்தியச் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால், கடந்த 2020 டிசம்பரில், நடிகை, நடன இயக்குநர், யூ-டியூபர் மற்றும் பல் மருத்துவர் எனப் பல பரிமாணங்கள் கொண்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் தனஸ்ரீ வர்மா என்பவரைத் திருணம் செய்துகொண்டார்.

இருப்பினும், கடந்த பிப்ரவரியில் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த சஹால் - தனஸ்ரீ, நீதிமன்ற உத்தரவுப்படி ஜூன் மாதம் பிரிந்தனர்.

இவ்வாறான சூழலில், சமீபத்திய பேட்டியொன்றில், விவாகரத்தான சமயத்தில் பலரும் தன்னைத் தவறாகப் பேசியதாகவும், சில சமயங்களில் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று யோசித்ததாகவும் மிகவும் எமோஷனலாக சஹால் பேசியிருந்தார்.

யுஸ்வேந்திர சஹால் - தனஸ்ரீ வர்மா
யுவேந்திர சஹால் - தனஸ்ரீ வர்மா

இந்த நிலையில், அதே பேட்டியில் மேலும் பல விஷயங்களை சஹால் பகிர்ந்திருக்கிறார்.

தங்கள் இருவருக்குள் பிரிவு எப்போதிலிருந்து ஆரம்பித்தது என்பதை விவரித்த சஹால், "ரொம்ப நாளாகவே அவரை நான் பார்க்கவில்லை. பின்னர் வீடியோ காலில் அவரைப் பார்த்தேன்.

அதில் எங்களுடன் வழக்கறிஞர்கள் பேசினார்கள். அதன்பிறகு எங்கள் இருவருக்கிடையில் மெசேஜ் உட்பட எதுவுமே இல்லை.

விவாகரத்துக்கு முன்னாள் ஆறேழு மாதங்கள் நாங்கள் பேசிக்கொள்ளவேயில்லை.

எப்போதாவது முக்கியமான விஷயமென்றால் மட்டும்தான் பேசுவோம். அதைத் தவிர வேறெதுவும் இல்லை.

டி20 உலகக் கோப்பைக்கு (2024) பிறகு அப்படித்தான் சென்றது" என்று கூறினார்.

Yuzvendra Chahal - யுஸ்வேந்திர சஹால்
Yuzvendra Chahal - யுஸ்வேந்திர சஹால்

அதன் தொடர்ச்சியாக, விவாகரத்து பேச்சுக்களை யார் தொடங்கியது என்ற கேள்விக்கு, "சில நேரத்தில் அவர், சில நேரத்தில் நான். பிறகு அது ஒரு நாள் பரஸ்பரம் நடந்தது" என்று சஹால் கூறினார்.

அப்போது, அதைச் சரிசெய்ய ஏதாவது வாய்ப்பு இருந்ததா என்று கேட்டபோது, "அப்படியெதுவும் இல்லை. போதுமான அளவுக்கு நாங்கள் முயற்சி செய்தோம். என்னால் முடிந்ததை நானும் முயன்றேன்" என்று சஹால் வெளிப்படையாகப் பேசினார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

அபிமன்யு ஈஸ்வரன்: `கருணுக்கு வாய்ப்பளிக்கிறார்கள்; என் மகன் அழுத்தத்தில் இருக்கிறான்’ - தந்தை வேதனை

இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று (ஜூலை 31) தொடங்கியது.8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த கருண் நாயர், முதல் மூன்று போட்டிகளில் ஒரு அரைசதம் கூட ... மேலும் பார்க்க

`விவாகரத்து விசாரணையின்போது அந்த டி-சர்ட் அணிந்து வந்தது ஏன்?’ - சஹால் சொன்ன விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சஹாலுக்கு கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி குர்கானில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.யுஸ்வேந்திர சஹால் - ... மேலும் பார்க்க

Chahal: `தினமும் இரண்டு மணிநேரம் அழுவேன்; தூக்கமே வராது’ - விவாகரத்து குறித்து சஹால்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சஹாலுக்கு கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி குர்கானில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.விவாகரத்துநடிகை, நடன... மேலும் பார்க்க

ENG vs IND: மீண்டும் புறக்கணிக்கப்பட்ட குல்தீப்; கருணுக்கு மேலும் ஒரு வாய்ப்பு; கில் கூறுவது என்ன?

இங்கிலாந்து vs இந்தியா நடப்பு டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்தும், ஒரு போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு போட்டி டிரா ஆகியிருக்கிறது.இங்கிலாந்து அணி 2 - 1 எனத் தொடரில் முன்... மேலும் பார்க்க

Ind vs Eng: `க்ரீன் பிட்ச்; ஓவல் டெஸ்டில் பும்ரா விளையாடுவாரா?’ - கில் முடிவு தான் என்ன?

இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையின் 5வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. முன்னதான செய்தியாளர் சந்திப்பில் பும்ரா பிளேயிங் 11ல் இருப்பாரா இல்லையா என்ற கேள்விக்கு... மேலும் பார்க்க

ENG vs IND: 'நான் மட்டும் கேப்டனா இருந்திருந்தா இங்கிலாந்து அணியை.!' - சுனில் கவாஸ்கர் காட்டம்

இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கிடையே மான்செஸ்டரில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. அந்தப் போட்டியில்`, ஹரி ப்ரூக், பென் டக்கெட் போன்ற பகுதி நேர பவுலர்களுக்கு எதிராக விளையாடித்தான் நீங்க... மேலும் பார்க்க