செய்திகள் :

Joyalukkas: 'தங்க மகன் ஜாய்' - டாக்டர்.ஜோய் ஆலுக்காஸ் அவர்களின் சுயமரியாதை தமிழ் பதிப்பு அறிமுகம்

post image

சர்வதேச வியாபாரத்தின் அடையாளம், ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் டாக்டர், ஜோய் ஆலுக்காஸ், தனது சுயசரிதையான ஸ்ப்ரெடிங் ஜோய்-ன் தமிழ் பதிப்பை "தங்க மகள் ஜோய்" என்ற தலைப்பில் வெளியீட்டார்.

ஐ.டி.சி கிராண்ட் சோலா-வில் (சென்னை) வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம், அவரது பயணத்தில் மிக முக்கியப் பங்கு வகித்த மக்களுக்கும், இடத்திற்கும் செலுத்தும் புகழ் வணக்கமாக அமைந்துள்ளது.

டாக்டர் ஜோய் ஆலுக்காஸ் கேரளாவில் தனது எளிமையான தொடக்கத்திலிருந்து உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் நம்பகமான ஜூவல்லரி ரீடெய்ல் பேரரசுகளில் ஒன்றை வழிநடத்தியது வரை பிரமிக்க வைக்கும் பயணத்தை 'தங்க மகன் ஜோய்' விவரிக்கிறது.

ஜோய் ஆலுக்காஸ்
ஜோய் ஆலுக்காஸ்

இது தொலைநோக்கு பார்வை, மின்னடைவு மற்றும் இடைவிடாத முயற்சியின் கதை, இப்போது தமிழ் மக்களைக் கவுரவிப்பதற்கும், இணைப்பதற்கும் தமிழில் மீண்டும் சொல்லப்படுகிறது. அவர்களின் அசைக்க முடியாத ஆதரவும் பகிரப்பட்ட மதிப்புகளும் ஜோய் ஆலுக்காஸின் வெற்றிக் கதையில் முக்கிய பங்கு வகித்துள்ளன. இந்த உத்வேகம் அளிக்கும் கதையை தலைமுறை தலைமுறையாக தமிழ் பேசும் வாசகர்களின் இதயங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதில் இந்த வெளியீடு ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தை அடைந்துள்ளது.

கதாபாத்திரத்தின் உண்மைத்தன்மை மற்றும் நோக்கம் இவற்றுடன் திரு. ஜோய் ஆலுக்காஸ் அவர்கள் தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார். துவக்க விழாவில் பேசிய டாக்டர் ஜோய் ஆலுக்காஸ், தனது எண்ணங்களைத் தனித்துவத்துடனும், நோக்கத்துடனும் பகிர்ந்து கொண்டார்.

"'ஸ்ப்ரெடிங் ஜோய்'க்கு கிடைத்த வரவேற்பு நெகிழவைப்பதாக மிகவும் அர்த்தமுள்ளதாக அமைந்துள்ளது. எங்கள் கனவில் நம்பிக்கை வைத்து, எங்களுடன் இந்தப் பாதையில் பயணித்த எங்களின் ஒவ்வொரு நலம் விரும்பிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் கூட்டாளிகளுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். பல ஆண்டுகளாக ஜோய் ஆலுக்காஸ் மீது மக்கள் வைத்த நம்பிக்கை ஒரு வணிகத்தைத் தாண்டி மிக உயர்வாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

ஜோய் ஆலுக்காஸ்
ஜோய் ஆலுக்காஸ்

ஒரு தனித்துவமான ஒரு பந்தத்தை உருவாக்கியுள்ளது. 'தங்க மகன் ஜோய்' என்ற தமிழ் பதிப்பின் மூலம் நாம் அடைந்த மகிழ்ச்சியின் ஒரு பகுதியைத் திருப்பிக்கொடுப்பதன் மூலம் எப்போதும் நம்மைத் திறந்த கரங்களுடன் தழுவியிருக்கும் தமிழ்நாட்டின் இதயங்களையும், இல்லங்களையும் சென்றடையும் என்று நம்புகிறேன். இந்தக் கதை ஒரு கனவு காண்பவரிடம் நம்பிக்கையைத் தூண்ட முடிந்தால், அது அதன் நோக்கத்தை நிறைவேற்றியிருக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.

இந்த வெளியீட்டு நிகழ்வு லட்சியம், சாதிக்கும் திறன் மற்றும் கலாசார இணைப்பின் பிரமாண்டமான மற்றும் கவர்ச்சியான ஒரு கொண்டாட்டமாக இருந்தது. வணிகம், சினிமா மற்றும் இலக்கிய துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். திறன் ஆய்வு, உத்வேகம் மற்றும் அர்த்தமுள்ள உரையாடல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு மாலை நேரமாக அமைந்தது. இந்த நிகழ்வு தமிழ் பதிப்பின் வெளியீட்டை நினைவுகூருவது மட்டுமல்லாமல், ஜோய்ஆலுக்காஸ் பிராண்டுக்கும் தமிழக மக்களுக்கும் இடையிலான பயணத்தையும் எடுத்துரைத்தது.

தங்க மகன் ஜோய் இப்போது மாநிலம் முழுவதும் உள்ள முன்னணி புத்தகக் கடைகளிலும், முக்கிய ஆன்லைன் தளங்களிலும் ஆகஸ்ட் 2,2025 முதல் கிடைக்கிறது. வாசகர்களை ஊக்குவிக்க லட்சியத்தோடு இருக்க, விடாமுயற்சியுடன் வைத்துக்கொள்ள இந்த புத்தகம் அமைவது உறுதி.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

GRT: தொடர்ந்து ஒன்பதாவது முறையாக பிளாட்டினம் விருதை வெல்லும் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்!

1964 ஆம் ஆண்டு எளிமையான ஆரம்பத்துடன் நிறுவப்பட்ட ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், சிறந்த கலைத்திறன், நேர்த்தியான கைவினைகலைஞர்களின் படைப்புகள், மற்றும் நிலையான வாடிக்கையாளர்களின் நம்பிக்கை காரணமாக இந்தியாவின் நம்பக... மேலும் பார்க்க

GRT: ஆடியை அசத்தலான ஆச்சரியங்களால் திருவிழாவாக மாற்றிய ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்

1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், அதன் மென்மையான தொடக்கத்திலிருந்து இன்று வரை இந்தியாவின் மிக பிரசித்திபெற்ற நகைக்கடைகளில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. அதன் கலை நயமான வடிவமைப்புகள், நுணுக்கம... மேலும் பார்க்க

தங்கம், வைரம் இல்லை, ஆனா... உலகின் மதிப்புமிக்க பொருளைத் தரும் மரங்கள்; இவ்வளவு மவுசு ஏன்?

அகர்வுட் என்று அழைக்கப்படும் அகில் மரம் உலகின் மிக விலையுயர்ந்த இயற்கைப் பொருட்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தங்கம், வைரம்போல் இது ஒளிர்வதில்லை ஒரு இருண்ட மணமிக்க மரமாக இருக்கிறது. இதிலிருந்து எடுக்க... மேலும் பார்க்க

Bitcoin: முகம் அறியப்படாதவர் உலகின் 12வது பணக்காரராக உயர்ந்தது எப்படி? மறைந்திருக்கும் மர்மம் என்ன?

பிட்காயின் (Bitcoin) எனும் மின்னணு நாணயத்தை உருவாக்கிய முகம் அறியப்பட்டாத சதோஷி நகமோட்டோ என்பவர், தற்போது உலகின் 12வது பணக்காரராக உயர்ந்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 128.92 பில்லியன் அமெரிக்க டாலர்கள... மேலும் பார்க்க

Trapit Bansal: மெட்டாவில் இணைய $100 மில்லியன் பெறுகிறாரா... யார் இந்த இந்தியர்?

த்ராபித் பன்சால் என்ற இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் மெட்டாவின் சூப்பர் இன்டெலிஜன்ட் யூனிடில் இணைய, ஓபன் ஏஐ (சேட் ஜிபிடி) நிறுவனத்திலிருந்து விலகியிருப்பது தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் பேசுபொருளாக... மேலும் பார்க்க