செய்திகள் :

Trapit Bansal: மெட்டாவில் இணைய $100 மில்லியன் பெறுகிறாரா... யார் இந்த இந்தியர்?

post image

த்ராபித் பன்சால் என்ற இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் மெட்டாவின் சூப்பர் இன்டெலிஜன்ட் யூனிடில் இணைய, ஓபன் ஏஐ (சேட் ஜிபிடி) நிறுவனத்திலிருந்து விலகியிருப்பது தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் பேசுபொருளாகியிருக்கிறது.

சாம் ஆல்ட்மேன்

ஓபன் ஏஐ நிறுவனத்தின் நிறுவனரும் சி.இ.ஓவுமான சாம் ஆல்ட்மேன், த்ராபித் பன்சால் மெட்டாவின் உயர் மட்ட ஆட்சேர்ப்பில் ஒருவராக இருப்பார் என்றும் அவர் மெட்டாவில் இணைவதற்கான போனஸாக 100 மில்லியன் டாலர் வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறியதாக தொழில்நுட்ப தளங்கள் தெரிவிக்கின்றன.

ஐஐடி கான்பூரில் படித்தவரான த்ராபித் 2022ம் ஆண்டு ஓபன் ஏஐ நிறுவனத்தில் இணைந்துள்ளார். இவர் அங்கு செல்வாக்குமிக்க ஆராய்ச்சியாளராக இருந்துள்ளார் என டெக் சர்ச் தளம் தெரிவிக்கிறது.

யார் இந்த த்ராபித் பன்சால்?

கணிதம், புள்ளியியல் மற்றும் கணினி அறிவியல் துறைகளை ஆழமாக பயின்றுள்ளார் த்ராபித்.

natural language processing (NLP), டீப் லேர்னிங் மற்றும் மெட்டா லேர்னிங் உள்ள்ளிட்டவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

ஐஐடி கான்பூரில் கணிதம் மற்றும் புள்ளியியல் துறையில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளார்.

open AI
Open AI

அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அங்கேயே முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

படிக்கும் காலத்திலேயே ஐஐஎஸ்சி பெங்களூரு, பேஸ்புக், கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் ஆய்வுகளில் இன்டெர்ட்ன்ஷிப் செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளார் த்ராபித்.

2017ம் ஆண்டு ஓபன் ஏஐயில் இன்டெர்ன்ஷிப் பணியை மேற்கொண்ட இவர், அதே நிறுவனத்தில் முதல் முழு நேர வேலையிலும் சேர்ந்துள்ளார். அங்கே முக்கிய திட்டங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

த்ராபித் பன்சால் மற்றும் சில ஆராய்ச்சியாளர்களை ஓபன் ஏஐயிலிருந்து தங்கள் நிறுவனத்தில் சேர்க்க 100 மில்லியன் டாலர் வழங்கப்படுவதாக சாம் அல்ட்மேன் குற்றம்சாட்டியுள்ளார்.

மெட்டா நிறுவனத்தின் தரப்பில் இந்த கூற்றை மறுத்துள்ளனர். ஆல்ட்மேன் மிகைப்படுத்திக் கூறுவதாகத் தெரிவித்துள்ளனர்.

Jeff Bezos: ரூ.430 கோடி... குவியும் பிரபலங்கள்... அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் திருமணம் | Photos

அமெசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ். அமெரிக்காவை சேர்ந்தவர். இவரது திருமணம், நேற்று, இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரத்தில் நடந்தது. இந்தத் திருமண நிகழ்வின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட ரூ.430 கோடி என்... மேலும் பார்க்க

Tanishq: மாபெரும் தங்கப் பரிமாற்ற திட்டம்; 2 காரட் வரை கூடுதல் மதிப்பு

தங்கத்தின் விலை உயர்ந்து வருவதை அடுத்து, டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய நகை சில்லறை விற்பனை பிராண்டாக முன்னணி வகிக்கும் தனிஷ்க், முன்னெப்போதும் இல்லாத வகையில் தங்கப் பரிமாற்றச் சலுகைய... மேலும் பார்க்க

இ-காமர்ஸ் பிசினஸ் தொடங்க ஒரு லேப்டாப், வைஃபை வசதி போதும்! - வழிகாட்டும் நிகழ்ச்சி

எந்தவித முன் அனுபவமும் இல்லாமல் வீட்டிலிருந்தே அமேசான் விற்பனை தளத்தில் பிசினஸ் தொடங்குவது பற்றிய நிகழ்ச்சி சென்னையில் ஜூன் 22 ஆம் தேதி(ஞாயிறு) நடைபெற உள்ளது. இ-காமர்ஸ் எக்ஸ்பெர்டும் நியூஜென்மேக்ஸ் நி... மேலும் பார்க்க

Bengaluru: 10 லட்சம் ஐடி ஊழியர்கள்; உலகின் முக்கிய தொழில்நுட்ப நகரங்களில் இடம் பெற்ற பெங்களூரு!

உலகின் முக்கிய தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றாக பெங்களூரு வளர்ந்துள்ளது. ரியல் எஸ்டேட் சேவை நிறுவனமான CBRE ஆல் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய தொழில்நுட்ப திறமை வழிகாட்டி புத்தகம் கூறுவதன்படி,... மேலும் பார்க்க

தூத்துக்குடி: "குஜராத் உப்பு இறக்குமதிக்குத் தடை" - உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை; பின்னணி என்ன?

இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடியில்தான் உப்பு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் உப்பு, இயற்கையாகவே அதிக வெண்மை நிறம் உடையது என்பதால் தூத்துக்குடி உ... மேலும் பார்க்க