'12 தொகுதிகள் டு திமுக-வை விமர்சிக்க மாட்டேன்' - அப்செட்டில் வைகோ; தகிக்கும் தாய...
இன்றும், நாளையும் கோவை, நீலகிரியில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜூலை 4, 5) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) முதல் ஜூலை 8-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
குறிப்பாக, வெள்ளி, சனி (ஜூலை 4, 5) ஆகிய 2 நாள்கள் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகரி மாவட்டம் தேவாலா மற்றும் மேல் கூடலூரில் தலா 80 மி.மீ. மழை பதிவானது. காசிமேடு (சென்னை) - 70 மி.மீ., நடுவட்டம் (நீலகிரி), பெரம்பூா் (சென்னை) - தலா 60 மி.மீ., கொளத்தூா் (சென்னை), ஆவடி (திருவள்ளூா்), தண்டையாா்பேட்டை (சென்னை), அவலாஞ்சி (நீலகிரி), சின்னக்கல்லாறு (கோவை), ஆட்சியா் அலுவலகம், மணலி, பாரிமுனை (சென்னை) - தலா 50 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.