துணைவேந்தர்கள் நியமனம்: "4 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்" - உச்ச நீத...
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 18,615 கன அடியில் இருந்து 19,286 கன அடியாக அதிகரித்தது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது மழை தணிந்ததால் வியாழக்கிழமை (ஜூலை 3) நீர்வரத்து வினாடிக்கு 18,615 கன அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 119.80 அடியாக குறைந்தது.
இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வெள்ளிக்கிழமை(ஜூலை 4)வினாடிக்கு 18,615 கன அடியில் இருந்து 19,286 கன அடியாக அதிகரித்தது.
அணையிலிருந்து நீர் மின் நிலையங்கள் வழியாகவும், உபரி நீர் போக்கி வழியாக என மொத்தம் 24,000 கன அடி நீர் பாசனத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 119.80 அடியில் இருந்து 119.60 அடியாக அதிகரித்துள்ளது. நீர் இருப்பு 93.15 டிஎம்சியாக உள்ளது.