அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
ஈட்டிய விடுப்பு சரண் வரும் அக். 1 முதல் நடைமுறை: தமிழக அரசு
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண், வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
வரும் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலாகும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே ஈட்டிய விடுப்ப சரண் நடைமுறைக்கு வருகிறது.
அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கரோனா பெருந்தொற்று காலத்தில், அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட பெரும் சுமையின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த அரசு அலுவலா்களுக்கான ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் நடைமுறை அடுத்த ஆண்டு ஏப். 1 முதல் செயல்படுத்த 2025-26 நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், இந்த அறிவிப்பை நிகழாண்டே செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதைப் பரிசீலித்து, ஈட்டிய விடுப்பு நாள்களில், 15 நாள்கள் வரை சரண் செய்து பணப் பலன் பெறும் நடைமுறை வரும் அக். 1 முதல் அமலுக்கு வரும். இதன்மூலம், சுமாா் 8 லட்சம் அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் பயன்பெறுவா். இந்த அறிவிப்பைச் செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.3,561 கோடி கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என்று அறிவித்திருந்தார்.
இதன்படி, அக். 1ஆம் தேதி முதல் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை அமலக்கு வரவிருக்கிறது என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
The Tamil Nadu government has announced that the return of earned leave for Tamil Nadu government employees will come into effect from October 1st.
இதையும் படிக்க.. ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய 300 சீன பொறியாளர்கள்?