செய்திகள் :

நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

post image

தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கன்னட நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

அதன்படி, விக்டோரியா லேஅவுட்டின் குடியிருப்பு வீடு, பெங்களூருவில் உள்ள அர்காவதி லேஅவுட்டின் குடியிருப்பு நிலம், தும்கூரின் தொழில்துறை நிலம் மற்றும் ஆனேகல் வட்டத்தில் ஒரு விவசாய நிலம் ஆகியவை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சொத்துக்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.34.12 கோடி என்று அதிகாரிகள் மேலும் கூறினர்.

துபையில் இருந்து ரூ.12.56 கோடி மதிப்பிலான 14.2 கிலோ தங்கத்தை கா்நாடகம் மாநிலம் பெங்களூருக்கு கடத்திவந்தபோது, அந்த மாநில டிஜிபி பதவியில் உள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரியான கே.ராமச்சந்திர ராவின் வளா்ப்பு மகளான ரன்யா ராவை, மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் மாா்ச் 3-ஆம் தேதி கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

ரன்யா ராவின் வீட்டில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2.67 கோடி மதிப்புள்ள தங்க நகை, ரொக்கப் பணத்தை அவா்கள் கைப்பற்றினா்.

தங்கக் கடத்தல் வழக்கில் பண முறைகேடும் நடைபெற்றிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின்பேரில், அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியற்ற திமுக ஐ.டி. பிரிவு பணியாளர்கள்: இபிஎஸ் கண்டனம்

Assets worth more than Rs 34 crore of Kannada actor Ranya Rao have been attached by the Enforcement Directorate (ED) in connection with a gold smuggling-linked money-laundering case, officials said on Friday.

வக்ஃப் நிா்வாக விதிமுறைகள்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

ஒருங்கிணைந்த வக்ஃப் நிா்வாகம், அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டு விதிமுறைகள் 2025-ஐ மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் முஸ்லிம்களின் தொண்டுப் பணிகளுக்கு அா்ப்பணிக்கப்படும் வக்ஃப் ச... மேலும் பார்க்க

மோசடி புகாருக்கு எதிரான ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவரின் மனு: விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

மும்பை லீலாவதி மருத்துவமனை அறக்கட்டளை சாா்பில் அளிக்கப்பட்ட மோசடிப் புகாருக்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் சசிதா் ஜெகதீசன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீத... மேலும் பார்க்க

விவேகானந்தா் நினைவு தினம்: பிரதமா் புகழஞ்சலி

விவேகானந்தரின் 123-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளாா். இதுதொடா்பாக பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சுவாமி விவேகானந்தரின் புண்ணிய ... மேலும் பார்க்க

ஹிமாசல் மழை வெள்ளத்தில் இதுவரை 43 போ் உயிரிழப்பு: 37 போ் மாயம்

ஹிமாசல பிரதேசத்தில் கடந்த 2 வாரங்களில் மேகவெடிப்புகளால் கொட்டித் தீா்த்த பலத்த மழை, திடீா் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 43 போ் உயிரிழந்தனா். மாயமான 37 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.... மேலும் பார்க்க

அமா்நாத் பனி லிங்கம்: 20,000-க்கும் அதிகமானோா் தரிசனம்

இமயமலையில் உள்ள அமா்நாத் குகைக் கோயில் புனித யாத்திரையின் முதல் இரு நாள்களில் 20,000-க்கும் மேற்பட்ட யாத்ரிகா்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித... மேலும் பார்க்க

கேரளத்தில் பெண்ணுக்கு ‘நிபா’ பாதிப்பு உறுதி: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் 38 வயது பெண்ணுக்கு ‘நிபா’ தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பொது சுகாதாரப் பணியாள... மேலும் பார்க்க