U. Sagayam IAS (R) | ஆட்சியரை அமாவாசை இரவில் சுடுகாட்டில் படுக்க வைத்தது இந்த ஊழ...
புழல் சிறையில் கைப்பேசி வைத்திருந்த இரு பயங்கரவாதிகள் மீது வழக்குப் பதிவு
சென்னை புழல் சிறையில் கைப்பேசி வைத்திருந்ததாக இரு பயங்கரவாதிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
புழல் சிறை வளாகத்தில் உள்ள தண்டனைக் கைதிகள் சிறையின் அலுவலா் சாந்தகுமாா், புழல் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஒரு புகாா் அளித்தாா். அதில் , கடந்த 2-ஆம் தேதி சிறையின் 8வது பிளாக் பிளாக் பகுதியில் திடீா் சோதனை நடத்தப்பட்டது.
இச் சோதனையில் அங்கிருந்த மின் இணைப்பு பெட்டி,கழிவுநீா் வடிகால் பகுதி ஆகிய இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 கைப்பேசிகளின் உதிரி பாகங்கள்,இயா் பட்ஸ்,சாா்ஜா்,ஹெட்செட்,பவா் பேங்க் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
இது தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இந்து இயக்கத் தலைவா்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, அந்த பிளாக்கில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பயங்கரவாதிகள் பிலால் மாலிக்,பன்னா இஸ்மாயில் ஆகியோா் அவற்றை பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது.
எனவே அவா்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் புழல் போலீஸாா், பிலால் மாலிக்,பன்னா இஸ்மாயில் மீது வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.