Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
சென்னையில் தங்கமயிலின் மேலும் இரு புதிய கிளைகள்
சென்னையின் ஐயப்பன் ஊரப்பாக்கம் மற்றும் கௌரிவாக்கத்தில் இரு புதிய கிளைகளை தங்கமயில் ஜுவல்லரி நிறுவனம் திறக்கிறது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மாமதுரையை தலைமையிடமாகக் கொண்ட தங்கமயில் நிறுவனம் கடந்த 33 ஆண்டுகளாக தங்க நகை விற்பனையில் தனக்கென தனியொரு அடையாளத்தை பதித்துள்ளது. தற்போது 30 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்களுடன் தமிழகம் முழுவதும் 62 கிளைகளைக் கொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்தச் சூழலில், சென்னை ஊரப்பாக்கத்தில் தனது 63-வது கிளையையும், கௌரிவாக்கத்தில் 64-வது கிளையையும் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) திறக்கவுள்ளது.
இந்த திறப்பு விழாவின் முக்கிய அம்சமாக, தங்கமயில் ஜுவல்லரி காட்சியகத்துக்குள்ளேயே தனது பிரத்யேக பிரைடல் ஸ்டோரை அறிமுகப்படுத்தி அதில் ‘தங்க மாங்கல்யம்’ என்னும் தனித்துவமான திருமண நகை கலெக்ஷன்களையும் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.