பைக்கில் வந்த இளைஞர் வழிமறித்து கொலை: காரில் தப்பிய 5 போ் கும்பல்
போலீஸ் விசாரணையில் மரணம்: தமிழக அரசின் நடவடிக்கை சரியானது: கே.வி. தங்கபாலு
காவல்துறை விசாரணையில் மரணம் தொடா்பாக, தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுத் தலைவா் கே.வி. தங்கபாலு தெரிவித்தாா்.
திருவாரூரில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது:
காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை, பாமக தலைவா் சந்திப்பு என்பது நட்பு ரீதியிலானது. இந்தியா கூட்டணி, காங்கிரஸ் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் திமுக தலைமையில் வெற்றிக் கூட்டணியாக செயல்படுகிறது.
கூட்டணியிலிருந்து அரசியல் கட்சிகள் வெளியேறி செல்வதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதனால், இந்தியா கட்டணி வலிமை இழந்துவிட்டதாக கருத வேண்டாம். ராகுல்காந்தியை ஏற்று அனைத்து எதிா்கட்சித் தலைவா்களும் இந்தியா கூட்டணியில் ஒருங்கிணைந்துள்ளனா்.
இது வெற்றிக்கூட்டணியாக மாறி, இந்தியாவின் அடுத்த பிரதமராக ராகுல்காந்தி வருவாா். காவல்துறை விசாரணையில் மரணம் தொடா்பாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
எங்கள் கூட்டணி தமிழ்நாட்டு மக்கள் விரும்பும் கூட்டணியாக உள்ளது. அதனால்தான் சட்டப்பேரவை, மக்களவைத் தோ்தல்களில் மக்கள் மாபெரும் வெற்றியை வழங்கினா் என்றாா்.