செய்திகள் :

மேட்டூா் அணையின் நீர் திறப்பு 40,000 கனஅடியாக அதிகரிப்பு

post image

மேட்டூா்: மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 30,000 கனஅடியில் 40,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீா் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் கா்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்டு வந்த உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை மாலை வினாடிக்கு 18,615 கனஅடியாக சரிந்தது.

காவிரியின் நீா் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருவதால் கா்நாடக அணைகளிலிருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை மாலை மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீா் மட்டம் 119.63 அடியாக இருந்தது. இதனால் மேட்டூர் அணை மீண்டும் நிரம்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு சனிக்கிழமை வினாடிக்கு 30,000 கனஅடியில் இருந்து 40,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணையிலிருந்து நீா் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,500 கனஅடி நீரும்உபரிநீா் போக்கி வழியாக வினாடிக்கு 17,000 கனஅடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி நீர் என 40,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

புதிய சுகாதார நிலையங்களில் 534 பணியிடங்களை நிரப்ப அரசாணை

The amount of water released from the Mettur Dam increased from 30,000 cubic feet per second to 40,000 cubic feet per second on Saturday morning.

நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய உரிமையாளர்!

கோவை: கோவையில் நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த காரியில் இருந்த உரிமையாளர் நல்வாய்ப்பாக உயிா் தப்பினாா். பெட்ரோலில் இருந்து எரிவாயுக்கு மாற்றிய போது தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.க... மேலும் பார்க்க

அதிமுக தலைமையில்தான் கூட்டணி; நானே முதல்வர் வேட்பாளர்! - இபிஎஸ்

2026 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் நானே முதல்வர் வேட்பாளர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச் செயலரும் எதிர்க்கட்சித் தலைவ... மேலும் பார்க்க

ஜூலை 7 இல் சோளிங்கர் வட்டத்துக்கு உள்பட்ட பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை

சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் கோயில் குடமுழுக்கையொட்டி ஜூலை 7 ஆம் தேதி(திங்கள்கிழமை) சோளிங்கர் வட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருள்... மேலும் பார்க்க

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

மூத்த தமிழறிஞா் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (91) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) காலமானாா். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.ராமநாதபுரம் மாவட... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை வெடிவிபத்து... தொடரும் உயிரிழப்பு!

சாத்தூா் அருகேயுள்ள சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் , காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி அழகு ராஜா சனிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் ... மேலும் பார்க்க

தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.72,400-க்கு விற்பனையான நிலையில், சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.72,480-க்கு விற்பனையாகிறது.ஆண்டு தொடக்கம் ... மேலும் பார்க்க