Armstrong: 'மக்கள் மனதில் அன்பையும் அறிவையும் விதைத்தது நம்ம ஆம்ஸ்ட்ராங்'- நயினா...
கிளப் உலகக் கோப்பை: செல்ஸி, ஃப்ளுமினென்ஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்!
கிளப் உலகக் கோப்பை காலிறுதியில் செல்ஸி, ஃப்ளுமினென்ஸ் அணிகள் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன.
தற்போது, காலிறுதிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் செல்ஸி - பல்மெய்ராஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 2-1 என செல்ஸி வென்றது.
இந்தப் போட்டியில் 1-1 என சமநிலையில் இருந்தபோது பல்மெய்ராஸ் அணியின் அகஸ்டின் கிளே தவறினால் ஓன் கோல் அடித்து செல்ஸி 2-1 என வெற்றி பெற்றது.

பல்மெய்ராஸ் தோல்வியுற்றாலும் அந்த அணியின் எஸ்டாவோ வில்லியன் ஆட்ட நாயகன் விருதுபெற்றார்.
மற்றுமொரு காலிறுதிப் போட்டியில், அல்-ஹிலால் அணியும் ஃப்ளுமினென்ஸ் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் ஃப்ளுமினென்ஸ் அணி 2-1 என வென்றது. இந்த அணியில் 40, 70-ஆவது நிமிஷங்களில் கோல் அடித்தார்கள். இதில் ஹெர்குலிஸ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்தப் போட்டியில் அல்-ஹிலால் அணியினர் 58 சதவிகிதம் பந்தினை தங்களது கட்டுக்குள் வைத்திருந்தும் தோற்றார்கள்.
சௌதி கிளப்பான அல் - ஹிலால் அணிக்கு 12 கார்னர் வாய்ப்புகள் கிடைத்தும் அதைப் பயன்படுத்த தவறிவிட்டார்கள்.
கிளப் உலகக் கோப்பை அரையிறுதிக்கு முதலிரண்டு அணிகளாக செல்ஸி, ஃப்ளுமினென்ஸ் தேர்வாகியுள்ளன.
Semi-final one: locked in.
— FIFA Club World Cup (@FIFACWC) July 5, 2025
BUY TICKETS | https://t.co/QE1Z92ZT7e#FIFACWC
Chelsea and Fluminense have advanced to the semi-finals of the Club World Cup after winning their quarter-finals.