`மராத்தியத்தின் இந்தி எதிர்ப்பு சூறாவளி உற்சாகம் தருகிறது..!' - முதல்வர் ஸ்டாலின...
40 வயதான கேப்டன் தியாகோ சில்வா..! அரையிறுதியில் முன்னாள் அணியுடன் மோதுகிறார்!
கிளப் உலகக் கோப்பை அரையிறுதுக்கு முன்னேறியுள்ள ஃப்ளுமினென்ஸ் அணியின் கேப்டன் தியாகோ சில்வா பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்.
40 வயதாகும் இவர் தனது சிறுவயது கால்பந்து கிளப்பான ஃப்ளுமினென்ஸ் அணி கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.
ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன. அதில் காலிறுதியில் அல்-ஹிலால் அணியும் ஃப்ளுமினென்ஸ் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் ஃப்ளுமினென்ஸ் அணி 2-1 என வென்றது. இந்த அணியில் 40, 70-ஆவது நிமிஷங்களில் கோல் அடித்தார்கள். இதில் ஹெர்குலிஸ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்தப் போட்டியில் அல்-ஹிலால் அணியினர் 58 சதவிகிதம் பந்தினை தங்களது கட்டுக்குள் வைத்திருந்தும் தோற்றார்கள்.
தியாகோ சில்வா டிஃபெண்டராக ஜுவெண்டியூட், ஏசி மிலன், பிஎஸ்ஜி, செல்ஸி அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
அதில் பிஎஸ்ஜி அணிக்காக 2012-2020 வரை விளையாடியுள்ளார். கடைசியாக 2020-2024 வரை செல்ஸி அணியில் இருந்தார். 2024 முதல் ஃப்ளுமினென்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
அரையிறுதியில் செல்ஸி அணியுடன் மோதவிருக்கிறது. தனது முன்னாள் அணியுடனே மோதும் தியாகோ சில்வா வெற்றி பெருவாரா என கால்பந்து உலகம் எதிர்பார்த்து வருகிறது.
கிளப் உலகக் கோப்பை 2025-இல் மிகவும் வயதான கேப்டனாக தியாகோ சில்வா இருப்பதும் குறிப்பிடத்தக்கது.