செய்திகள் :

ஒரு சிறுவன் கலைஞனாக உருவானத் தருணம்! - மிருதங்கம் அரங்கேற்ற கதை

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

அமெரிக்காவின் அரிசோனாவில் பள்ளியில் படிக்கும் என் மகன் ராஹுல், ஏழாவது வயதில் மிருதங்கம் பயிற்சி தொடங்கினான். 2024ல், ராஹுலின் குரு கலைமாமணி திருவாரூர் வைத்யநாதன்.

அரங்கேற்றம் என்பது சாதாரண நிகழ்ச்சி இல்லை. அது ஒரு குடும்ப திருமணத்துக்கு சமம் – இசையை மையமாக கொண்டு நடந்த ஒரு தெய்வீக திருவிழா.

கார்நாடிகா சகோதரர்கள் KN சசிகிரண், P கணேஷ, B.V. ராகவேந்திர ராவ் (வயலின்), டாக்டர் எஸ். கார்த்திக்* (கட்டம்), வி. ந். சுந்தர்* (மோர்சிங்) என இவர்கள் எல்லாரும் ராஹுலுடன் அரங்கேற்றத்தில் வாசிக்க ஒப்புக்கொண்டதும், அந்த பக்குவம் ராஹுலுக்கு வந்து விட்டது என்று தெரிந்தது!

ராஹுலின் குரு திருவாரூர் வைத்யநாதன் அவர்களே ரெகார்டிங்கில் மிருதங்கம் வாசித்தார். நாங்கள் பெற்றோர்களாக, இதற்குப்பின் எடுத்து வைத்த பெரிய பங்குதான் – குருவை நேரில் பயிற்சிக்கு ஏற்பாடு பண்ணியது தான். எங்கள் வீட்டுக்கு ஆசானை வரவழைக்க, அவருடைய பல வேலைகளை நிறுத்தி, குடும்பத்திலிருந்து அவர் தற்காலிகமாக விலகி, ராஹுலுக்கு நேரமெடுத்து வந்தது – அது ஒரு ஆசானின் சிருஷ்டிக்கே ஒரு சாட்சி.

அரங்கேற்றத்தை எங்கே நடத்துவது? இந்தியாவா அல்லது அமெரிக்காவா? நிறைய யோசிச்சோம். முதிர்ந்த தாத்தா-பாட்டி, உறவுகள் எல்லாம் கலந்து கொள்ளும் வகையில, சென்னையிலேயே செய்வோம் என்று முடிவு செய்தோம். எங்களோட இந்திய கோடை விடுமுறையை சேர்த்து திட்டமிட்டோம், செலவு குறைவாக இருக்கும்.

சென்னைக்கு வந்து 2 வாரங்கள் ஆசானுடைய வீட்டுக்கு அருகே ஒரு சாப்பாட்டு அபார்ட்மென்டில் தங்கினோம் – ராஹுல் நாள்தோறும் ஆசானோட வீட்டுக்கே போய் பயிற்சி – அது ஒரு “மாணவர்-குரு” பந்தத்தின் உயிர்!

*இறுதிக் கணம் – ஒரு முழுமையான ரெஹர்சல்*.

பெரிய இசைஞர்கள் எல்லாரும் நேரில வந்து, ராஹுலை பாராட்டி ஊக்கப்படுத்தினார்.

அரங்கேற்ற நாளன்று, பளீச்சென மேடை அலங்காரம், கலையும் ஆனந்தமும்தான் பூரணமாக காண முடிந்தது.

கடைசி பாடலான "ராமா ராமா" வில் என் மற்றொரு பிள்ளைகள் ரிஷி (வீணை) மற்றும் ரோஹன் (புல்லாங்குழல்) சேர்ந்ததும் – அந்த தருணம் என் குடும்பத்தின் இசைக் கனவின் உச்சம்.

விருந்தினர்களில், மன்னார்குடி ஈஸ்வரன் சார், க்ளீவ்லன்ட் VV சுந்தரம் சார் ஆகியோர் வந்ததில் ஆரோக்கிய பாராட்டு, ஆசீர்வாதம், மேலும் – ஒவ்வொருவரும் "பயிற்சி, பொறுமை, தொடர்ச்சியான உழைப்பு" இவை முக்கியம் என்று சொன்னதும் – ரொம்ப அர்த்தமாயிருந்தது.

இது எங்களுக்கு ஒரு சிறுவனின் கலைஞனாக உருவாகும் பயணம் – ராஹுலின் வலிமை, புன்னகை, தைரியம், தவம், நன்னடை, நேர்த்தி, ஸ்ருதி, ஸம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக்கொண்டான்.

கலைமாமணி திருவாரூர் வைத்யநாதன்* நாங்கள் மனமார்ந்த நன்றி செலுத்துகிறோம். அவரோட வழிகாட்டுதல் இல்லாமலா இது நடந்திருக்காது.

இது ஒரு வாழ்நாள் நினைவாக இருக்கும் – ஒளிரும் மேடையிலும், உருகும் மனதிலும்!

அன்புடன்,

ரம்யா ரங்கநாதன்

(ராஹுலின் அம்மா)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

மதுரை: `மீனாட்சி திருக்கல்யாண பஞ்சரத்ன கீர்த்தனைகள்' இசையமைத்து பாடிய கலைஞர்களுக்கு பாராட்டு

"மதுரை மீனாட்சியம்மனை குளிர்விக்கும் திருக்கல்யாண பஞ்சரத்ன கீர்த்தனைகள், மதுரையில் பாடப்பட்டது மிகவும் சிறப்பானது" என ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் வாழ்த்தினார்.கர்நாடக இசையில் காலத்தால் அழியாத ஆயிரக்கணக... மேலும் பார்க்க

BTS: கட்டாய ராணுவ சேவையை முடித்த RM மற்றும் V... ஒன்றிணையும் குழுவினர்! - கொண்டாடும் ரசிகர்கள்

பிரபல தென்கொரிய இசைக்குழு BTS-ன் உறுப்பினர்களான RM (கிம் நம்ஜூன்) மற்றும் V (கிம் டேஹ்யூங்) அந்த நாட்டின் விதிமுறைப்படி 19 முதல் 28 வயதுக்குள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய ராணுவ சேவையை நிறைவேற்றி வீடு த... மேலும் பார்க்க

Krishnakumar Kunnath - KK (கிருஷ்ணகுமார் கண்ணதாசன்) பாடகர்

கிருஷ்ணகுமார் கண்ணதாசன் (KK)பிறப்பு: 1968, சென்னை, இந்தியாஇறப்பு: 31 மே 2022கோடைச் சொற்கள்: இந்திய இசை, பாடகர், இசையமைப்பாளர்மருத்துவம்: கிருஷ்ணகுமார் கண்ணதாசன் (KK) தமிழில் அதிகம் பரபரப்பாக பேசப்படும... மேலும் பார்க்க