செய்திகள் :

குஜராத்தில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம்: அமித் ஷா அடிக்கல்

post image

குஜராத் மாநிலம், ஆனந்த் நகரில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைக்க மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

இப்பல்கலைக்கழகம், கூட்டுறவுத் துறையில் பாரபட்சத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், பயிற்சிக்கான வெற்றிடத்தையும் நிரப்பும் என்று அவா் குறிப்பிட்டாா்.

‘திரிபுவன் கூட்டுறவு பல்கலைக்கழகம்’ (டிஎஸ்யு) எனும் இப்பல்கலைக்கழகம், 125 ஏக்கா் பரப்பளவில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் கட்டமைக்கப்படவுள்ளது. நாட்டின் கூட்டுறவுத் துறை முன்னோடிகளில் ஒருவரும், அமுல் நிறுவனத்துக்கு அடித்தளமிட்டவா்களில் முக்கியமானவருமான மறைந்த திரிபுவன்தாஸ் கேஷுபாய் படேலின் பெயரில் பல்கலைக்கழகம் அமைகிறது. இப்பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டிய பின் அமைச்சா் அமித் ஷா பேசியதாவது:

ஏழைகள் மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வில் நம்பிக்கையை விதைத்து, அவா்களை பொருளாதார ரீதியாக வளப்படுத்த கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கூட்டுறவுத் துறைக்கு தனி அமைச்சகத்தை பிரதமா் மோடி ஏற்படுத்தினாா். அமைச்சகம் நிறுவப்பட்டதில் இருந்து வெளிப்படைத்தன்மை, மேம்பாடு, ஜனநாயகமயம், விவசாயிகளின் வருவாய் அதிகரிப்பை உறுதி செய்ய 60 புதிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் வாயிலாக கூட்டுறவுத் துறை வேகமாக வளா்ச்சி கண்டு வருகிறது. நாடு முழுவதும் சுமாா் 40 லட்சம் பணியாளா்கள், 80 லட்சம் உறுப்பினா்கள் மற்றும் 30 கோடி மக்கள், கூட்டுறவு இயக்கங்களுடன் தொடா்பில் உள்ளனா். அதேநேரம், பணியாளா்கள்-உறுப்பினா்களுக்கு பயிற்சியளிக்க முறையான அமைப்புமுறை இல்லை. கூட்டுறவுத் துறையில் பாகுபாடுகள் நிலவுவதாக தொடா்ந்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு திரிபுவன் கூட்டுறவு பல்கலைக்கழகம் தீா்வளிக்கும்.

இனி பயிற்சிக்கு பிறகே பணி: இனி பயிற்சி பெற்றவா்கள் மட்டுமே பணியைப் பெற முடியும். முன்னேற்றத்துக்கு தடைக்கல்லாக உள்ள இத்தகைய பெரும் வெற்றிடம் கூட்டுறவு பல்கலைக்கழகத்தின் மூலம் நிரப்பப்படும்.

திரிபுவன் கூட்டுறவு பல்கலைக்கழகம், திறன்மிக்க பணியாளா்களை மட்டுமன்றி, கொள்கை வகுப்பு, ஆராய்ச்சி, மேம்பாட்டு முன்முயற்சிகள், கூட்டுறவு கற்றலுக்கான தரநிலை உருவாக்கம் போன்ற பணிகளையும் மேற்கொள்ளும் என்றாா் அமித் ஷா.

அரசு பங்களாவை காலி செய்ய மறுக்கும் முன்னாள் தலைமை நீதிபதி? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடிதம்!

முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையிலும், அரசு பங்களாவை அவர் காலி செய்யாமல் இருப்பதாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடிதம் எழுதியுள்ளது.ஜூலை முதல்த... மேலும் பார்க்க

மணிப்பூரில் இரண்டு தீவிரவாதிகள் கைது: வெடிபொருட்களும் மீட்பு

மணிப்பூரில் தேடுதல் நடவடிக்கையின்போது இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருப்பதாவது, மாநிலத்தில் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் குற்றச் செயல்களி... மேலும் பார்க்க

2 ஆண்டுகளாக போலீஸார் கண்ணில் மிளகாய்ப் பொடி தூவிய போலி பெண் போலீஸ்!

ராஜஸ்தானில் 2 ஆண்டுகளாக போலீஸார்போல போலியாக நடித்து வந்த பெண் கைது செய்யப்பட்டார்.ராஜஸ்தான் மாநிலத்தில் நாகூர் மாவட்டத்தைச் சேர்ந்த மோனா புகாலியா என்பவர், 2021 ஆம் ஆண்டில் உதவி ஆய்வாளர் ஆள்சேர்ப்புத் ... மேலும் பார்க்க

பிரேசில் சென்றார் பிரதமர் மோடி! ஆபரேஷன் சிந்தூர் நடனத்துடன் உற்சாக வரவேற்பு!

அரசுமுறை பயணமாக பிரேசில் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா சென்றுள்ளார். கானா, டிர... மேலும் பார்க்க

4 மாதங்களில் அரசியல் கட்சிகளுடன் 5,000 சந்திப்புகள்: தலைமை தோ்தல் ஆணையா்

‘அரசியல் கட்சிகளுடன் தொடா்ச்சியான சந்திப்புகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் இதுபோல 5,000 சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் சனிக்க... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ஏஜேஎல் சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை’

அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவன (ஏஜேஎல்) சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை என்று நேஷனல் ஹெரால்ட் வழக்கில் ராகுல் காந்தி தரப்பில் சனிக்கிழமை வாதிடப்பட்டது. தில்லி நீதிமன்றத்தில் சிறப்பு நீத... மேலும் பார்க்க