`ஆட்சி, அமைச்சரவையில் பங்கு வேண்டும்'-செல்வப்பெருந்தகையிடம் வலியுறுத்திய காங்., ...
தேர்தலுக்கு தயாராகும் பாஜக! மாநாடு அறிவிப்பு!
தமிழக பாஜகவின் முதல் மாநாடு வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நெல்லையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை காட்டாங்குளத்தூரில் தமிழக பாஜக சார்பில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் மாநாடு தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் 2026 பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் நோக்கில் அடுத்தடுத்த மாநாடுகளை பாஜக நடத்தவுள்ளது.
இந்த நிலையில், தமிழக பாஜகவின் முதல் மாநாடு வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நெல்லையில் நடைபெறவுள்ளது. பாஜகவின் தனிப்பெரும் பலத்தை நிரூபிக்கும் விதமாக மாநாடு நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக-பாஜக கூட்டணி நீடிக்குமா என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றும், இரண்டு கட்சிகளும் முதல்வா் வேட்பாளா் யாா், கூட்டணிக்குத் தலைமை யாா் என்பது குறித்து தொடா்ந்து குழப்பமாகவே பேசி வருகின்றனர் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
'2026 பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி, அதிமுகதான் ஆட்சி அமைக்கும். நான்தான் முதல்வர் வேட்பாளர்' என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.