மொஹரம் ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 3 பேர் காயம்
2 ஆண்டுகளாக போலீஸார் கண்ணில் மிளகாய்ப் பொடி தூவிய போலி பெண் போலீஸ்!
ராஜஸ்தானில் 2 ஆண்டுகளாக போலீஸார்போல போலியாக நடித்து வந்த பெண் கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நாகூர் மாவட்டத்தைச் சேர்ந்த மோனா புகாலியா என்பவர், 2021 ஆம் ஆண்டில் உதவி ஆய்வாளர் ஆள்சேர்ப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாதபோதிலும், காவல் பயிற்சி நிறுவனத்தில், மூலி தேவி என்ற பெயரில் உதவி ஆய்வாளர் என்றுகூறி, போலி ஆவணங்களுடன் நுழைந்துள்ளார்.
விளையாட்டு ஒதுக்கீட்டின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்கிற போலியான ஆவணங்களுடன் ராஜஸ்தான் போலீஸ் அகாதெமியில் சேர்ந்தார். சுமார் 2 ஆண்டுகளாக போலீஸ் சீருடையின் வலம்வந்த மோனா, காவல்துறையினரின் வாட்ஸ்ஆப் குழுவிலும் இணைக்கப்பட்டு, நாள்தோறும் அணிவகுப்பில் கலந்து கொண்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, தன்னை ஓர் அதிகாரியாகக் காட்டிக் கொண்ட மோனா, சீருடையுடன் ரீல்ஸ் வெளியிடுவதும், உயர் அதிகாரிகளுடன் டென்னிஸ் விளையாடுவது, புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது என பல லீலைகளை புரிந்துள்ளார்.
இந்த நிலையில்தான், அவருடன் பயிற்சி பெற்றுவந்த துணை உதவியாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு, மோனாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, போலி ஆவணங்களுடன் தான் வந்ததை மோனா ஒப்புக் கொண்டார். இருப்பினும், 2023 முதல் அவர் தலைமறைவான நிலையில், சிகார் மாவட்டத்தில் மோனா புகாலியா கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து போலீஸ் சீருடைகள் உள்பட ரூ. 7 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.