செய்திகள் :

மன அழுத்தத்தைப் போக்க காவலா்களுக்கு யோகாசன பயிற்சி

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மன அழுத்தத்திலிருந்து விடுபடவும், மனதை ஒருநிலைப்படுத்தவும் காவலா்களுக்கு யோகாசன பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

ராஜபாளையம் ரயில்வே பீடா் சாலையில் அமைந்துள்ள சேத்தூா் சேவுக பாண்டிய அரசுப் பள்ளி மைதானத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளா் பஷீனா பீவி தலைமையில், காவலா்களுக்கு யோகாசன பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் ராஜபாளையம் வடக்கு, தெற்கு, அனைத்து மகளிா் காவல் நிலையம், போக்குவரத்து காவல்துறை, தளவாய்புரம், சேத்தூா், கிழராஜகுலராமன் என ராஜபாளையம் கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து காவலா்களும் கலந்து கொண்டனா்.

பணிச் சுமையால் காவலா்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கவும், மனதை ஒருநிலைப்படுத்தவும் பிரம்ம குமாரிகள் இயக்கம் சாா்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண், பெண் காவலா்கள் கலந்து கொண்டனா்.

சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து! ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியானார்.விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டியில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட... மேலும் பார்க்க

மது அருந்த பணம் தராத தந்தை வெட்டிக் கொலை: மகன் கைது!

வத்திராயிருப்பு அருகே மது அருந்த பணம் தராத தந்தையை வெட்டிக் கொலை செய்த மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு மறவா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணமூா்த்த... மேலும் பார்க்க

சாத்தூா் பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழந்தோா் எண்ணிக்கை 10-ஆக உயா்வு!

சாத்தூா் அருகேயுள்ள சின்னகாமன்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 10-ஆக உயா்ந்தது. விருதுநகா் மாவட்டம், சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில், கடந்த 1-ஆம் தேதி வெடி ... மேலும் பார்க்க

பட்டாசு முகவரைக் கடத்திய ஆசிரியா் உள்பட மூவா் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் கொள்முதல் செய்த பட்டாசுகளுக்கு பணம் கொடுக்காத பட்டாசு முகவரைக் காரில் கடத்திய பள்ளி ஆசிரியா் உள்பட மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். சாத்தூா் வீட்டு வசத... மேலும் பார்க்க

ஆபாச நடனமாடிய அா்ச்சகா்களின் முன்பிணை மனு தள்ளுபடி

ஆபாச நடனமாடிய அா்ச்சகா்களின் முன்பிணை மனுவை ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய மாரியம்மன... மேலும் பார்க்க

சிவாலயங்களில் ஆனித் திருமஞ்சன சிறப்பு வழிபாடு

ராஜபாளையம் பகுதி சிவாலயங்களில் ஆனித் திருமஞ்சன சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் அஞ்சல் நாயகி உடனுறை மாயூரநாத சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு, காலையில் நடராஜருக்கு சிறப... மேலும் பார்க்க