ஆகாஷ் தீப் அசத்தல்; விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து!
கிளப் உலகக் கோப்பை: பிஎஸ்ஜி, ரியல் மாட்ரிட் அரையிறுதிக்கு முன்னேற்றம்!
கிளப் உலகக் கோப்பையில் ரியல் மாட்ரிட், பிஎஸ்ஜி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன.
காலிறுதியில் ரியல் மாட்ரிட், டார்ட்மண்ட் அணிகள் மோதின. இந்தப் போடியில் ரியல்மாட்ரிட்டின் கான்ஸாலோ கார்ஸியா 10-ஆவது நிமிஷத்திலும் பிராங் கார்ஸியா 20-ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தார்கள்.
இரண்டாம் பாதியிலும் டார்ட்மண்ட் கோல் அடிக்கவில்லை. பின்னர் 90+2- ஆவது நிமிஷத்தில் ஒரு கோல் அடிக்க எம்பாபே 90+4-ஆவது நிமிஷத்தில் பதிலடி கொடுத்தார்.
இறுதியில் பெனால்டியில் 90+8ஆவது நிமிஷத்தில் டார்ட்மண்ட் கோல் அடித்தும் பயனில்லாமல் சென்றது. 3-2 என ரியல் மாட்ரிட் வென்றது.
மற்றுமொரு காலிறுதியில் பிஎஸ்ஜி, பயர்ன் மியூனிக் அணிகள் மோதின. இதில் பிஎஸ்ஜி அணி 2-0 என வென்றது.
இரு அணிகளுமே முதல் பாதியில் கோல் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் டியூ 78-ஆவது நிமிஷத்திலும், டெம்பேலே 90+6-ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தார்கள்.
ரியல் மாட்ரிட் - பிஎஸ்ஜி அணிகள் அரையிறுதியில் வரும் ஜூலை 10ஆம் தேதி இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு போட்டி நடைபெறவிருக்கிறது.
மற்றுமொரு அரையிறுதியில் செல்ஸி - ஃபுளுமினென்ஸ் அணிகள் வரும் ஜூலை 9-ஆம் தேதி மோதுகின்றன.
Real Madrid and PSG advanced to the semi-finals of the Club World Cup.